Categories
தொடுகை மின்னிதழ் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் அறவழிப் போராட்ட

CSGAB போராட்டக்களம்: நாள் பத்து

இன்றேனும் கிடைக்குமா தீர்வு?

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்ட அறிவிப்பு.

நாள் (10): 21/2/2024.

நேரம்: காலை. 9.30.

இடம்: பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புக்கு: 9382804040, 7449158045, 7904881610.

அனைவருக்கும் வணக்கம்! தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உரிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம். தீவிரமாக நடை பெற்று வரும் நம் போராட்டத்தில் பணியில் உள்ளோரும், பணி நாடுனர்களும், மாணவர்களும் பெருந்திறளாகக் கலந்துகொண்டார்கள். 

கிட்டத்தட்ட 4 மாவட்டங்களில், சென்னையில் 2 இடங்களில் நம் போராட்டங்கள் இன்று களம் கண்டன. அலைகடலெனத் திரண்ட நம் கூட்டத்தையும் ஆற்பரிப்பையும் கண்டு அதிர்ந்தது தமிழகம்.

 எனினும் அரசின் அச்சுருத்தல்கள் தொடர்ந்தன. மாணவர்களுக்கு அரசு விடுதிகளும் தொல்லைகள் தரத் துனிந்ததன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 2 அரசு விடுதிகளுக்கும் காலை 4 மணி அளவில் சென்ற காவலர்கள் அந்த விடுதிகளில் அத்துமீரி நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த பார்வையற்ற மாணவர்களைக் கூண்டோடு கைது செய்தார்கள். பார்வையற்ற நம் சங்க நிர்வாகிகள் கூட, அந்த மாணவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளாதவாறு அவர்களின் அராஜகப் போக்கு இருந்தது. இந்தச் செய்தி, ஊடகத்தில் வராதவாறு பார்த்துக் கொண்டது காவட்டுறை! பார்வையற்றோரை அச்சுறுத்தும் வகையில் அவர்களை எல்லாச் சாலைகளிலும் பின் தொடர்கிறார்கள் காவலர்கள். அதற்குச் சான்றாக நம் சங்கத் தலைவர், செயலர் உள்ளிட்ட மூவரை பின் தொடர்ந்து கைது செய்து சைதாப்பேட்டையில் அடைத்து வைத்து, போராட்டத்தினை முடித்துக் கொள்ளும்படி அச்சுறுத்தி, மன உளைச்சல் கொடுத்தனர். 

 இவற்றை எல்லாம் நம் சங்கத்தின் முன்னணிப் போராளிகள் சென்று, சரி செய்யவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

மாலை விடுவிப்புகளும் தாமதப் பட்டதால் பெண்கள் மிகவும் இன்னலுற்றனர். இப்படிப்பட்ட அச்சங்களால் நம் போராட்டத்தின் வலிமை குன்றும் என ஆள்வோர் நினைக்கிறார்கள். இல்லை இல்லை எங்கள் பலமே ஒற்றுமை என்பதனை உரக்கச் சொல்லவும், கோரிக்கைகளை வென்றெடுக்கவும் உரிமைகளை மீட்கவும் தமிழகமெங்கும் உள்ள பார்வையற்ற சமூக உறவுகள் பெறும் திரளாக கலந்து கொண்டு இந்த தொடர் போராட்டத்தை வெற்றி போராட்டமாக மாற்ற வாருங்கள் வாருங்கள் என்று உங்களை சங்க செயற்குழு மற்றும் போராட்டக் குழு இருகரம் கூப்பி அழைக்கிறது. பயத்தை மரைக்க, எதிரியை அச்சுறுத்துவது இப்போதைய அரசின் குணம் போலும்! அச்சமே நம்மைக்கண்டு அச்சம் கொள்ளும் என ஆற்பரித்துச் சொல்ல வாருங்கள் தோழர்களே!

வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை நம் சங்கம் நடத்தி வருகிறது.

இந்தப் போராட்டத்தை ஒடுக்க எவ்வளவு வேலைகள், எவ்வளவு கனிவுகள்! 

பலவீனத்தை தன் பலமாகக் கொள்ளும் அதிகார வர்கத்துக்கு நம் பலம் எதுவெனக் காட்ட இதைவிட ஒரு தருணம் வேண்டுமோ?

இந்தப் போராட்டத்திக்கு அணிதிரண்டு வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்!

வீருகொண்டு எழும்படி வீரர்ச் சிங்கங்களை விளிக்கிறோம்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு பொருள் காண வாருங்கள்!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உண்மையை உலகுக்குச் சொல்ல உங்கள் கரங்களை ஒன்று சேருங்கள்!

உருதி மிகுந்த போராட்டமே வேலையைப் பெற்றுத் தரும்!

 போராட்டம் வென்றிடுவோம், 

வெற்றி வாகை சூடிடுவோம்.

கடலூர் மாவட்ட போராட்ட அறிவிப்பு:

வணக்கம் தோழர்களே. பத்தாவது நாளாக சென்னையில் தொடர்ந்து நடைபெறும் எம் பார்வையற்றவர்களின் தொடர் உண்ணாவிரதம் மற்றும் போராட்டத்தை ஆதரித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடத்த உள்ளோம் அலைகடலை திறந்து வாரீர். நாள் 21 2 2024 நேரம் மாலை 4 மணி. தொடர்பு கொள்ள வேண்டிய நண்பர்கள் மா மகேந்திரன் ஆர் பாரதிராஜா ஏ செந்தமிழ்ச்செல்வி பி ஹரி கிருஷ்ணன் பி முரளி


Indiatoday news

Specially abled persons’ sit-in for fulfillment of 4% quota in government jobs https://www.indiatoday.in/cities/chennai/story/chennai-specially-abled-people-protest-implementation-reservation-visually-impaired-government-jobs-2504038-2024-02-19?utm_source=washare&utm_medium=socialicons&utm_campaign=shareurltracking


கிருஷ்ணகிரி மாவட்ட போராட்ட அறிவிப்பு

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சென்னையில் பதினோராம் நாள் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்ட அறிவிப்பு.

நாள் (11): 22/02/2024.

நேரம்: காலை. 10.00. மணியளவில்

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிருஷ்ணகிரி.

தொடர்புக்கு: 6369612157, 7548872653,

இராணிப்பேட்டை மாவட்ட பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் ஆர்பாட்டம் அழைப்பு. 

அன்புடையிர் வணக்கம். கடந்த பத்து நாட்களாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம், மற்றும் அறவழியிலான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக, வருகின்ற 22-2-2024 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் இராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் இராணிப்பேட்டை மாவட்ட பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. எ.நித்தியாநந்தம். அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து பார்வையற்ற தோழர்களும், சமூக ஆர்வலர்களும், சனநாயக ஆற்றல்களும் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

உரையாற்றுபவர்கள்

திரு. சீ.ம. இரமேஷ்கர்ணா. மாவட்ட செயலாளர் வி.சி.க.

திரு. பி.என். உதையகுமார், மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.

திரு. ஜெ. அசேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சி.

தோழர். த.க.பா. புகழேந்தி, மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்.

தோழர் மணிகண்டன். வட்ட செயலாளர், சி.பி.எம்.

தோழர். சங்கர் மேஸ்திரி, சி.பி.ஐ.

தோழர். செந்தமிழ் முருகன், புரட்சிகர இளைஞர் முன்னணி.

தோழர். பொ. பெருமாள், திராவிடர் கழகம்.

தோழர். ரகிமான்ஷரீப், மாவட்ட துணைச் செயலாளர்.,த.மு.மு.க. 

திரு. என். விசுவநாதன், மாவட்ட செயலாளர், த.வா.க. 

 மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

 அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர்.

தொடர்புக்கு: 97895 89545. 9940215933.

Times of India News:

60 visually impaired protesters detained –

கண்டன ஆர்பாட்டம், விழுப்புரம் மாவட்டம்.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சென்னையில் பதினோராம் நாள் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விழுப்புரம் பார்வையற்றோர் நல சங்கம் போராட்ட அறிவிப்பு.

நாள் (11): 22/02/2024.

நேரம்: காலை. 10.00. மணியளவில்

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம்.

தொடர்புக்கு: 9788667141

அனைவருக்கும் வணக்கம்! 

தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உரிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம். 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தீவிரமாக நடை பெற்று வரும் நம் போராட்டத்தில் பணியில் உள்ளோரும், பணி நாடுனர்களும், மாணவர்களும் பெருந்திறளாகக் கலந்துகொண்டு போராடி வருகின்றனர். கிட்டத்தட்ட 13 மாவட்டங்களில், சென்னையில் பல இடங்களில் நம் போராட்டங்கள் இன்று களம் கண்டன. அலைகடலெனத் திரண்ட நம் கூட்டத்தையும் ஆற்பரிப்பையும் கண்டு அதிர்ந்தது தமிழகம்.

எனினும் அரசின் அச்சுருத்தல்கள் தொடர்ந்தன. காவலர்களாலும் மருத்துவர்களாலும் நம் உண்ணாவிரத வீரப் போராளிகள் தொல்லைகளுக்கு உள்ளாயினர். அதே நேரத்தில் மாணவர்களுக்கு அரசு விடுதிகளும் தொல்லைகள் தரத் துணிந்தன. இவற்றை எல்லாம் நம் சங்கத்தின் முன்னணிப் போராளிகள் சென்று, சரி செய்யவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

மாலை விடுவிப்புகளும் தாமதப் பட்டதால் பெண்கள் மிகவும் இன்னலுற்றனர். இப்படிப்பட்ட அச்சங்களால் நம் போராட்டத்தின் வலிமை குன்றும் என ஆள்வோர் நினைக்கிறார்கள். இல்லை இல்லை எங்கள் பலமே ஒற்றுமை என்பதனை உரக்கச் சொல்லவும், கோரிக்கைகளை வென்றெடுக்கவும் உரிமைகளை மீட்கவும் தமிழகமெங்கும் உள்ள பார்வையற்ற சமூக உறவுகள் பெறும் திரளாக கலந்து கொண்டு இந்த தொடர் போராட்டத்தை வெற்றி போராட்டமாக மாற்ற வாருங்கள் வாருங்கள் என்று உங்களை சங்க செயற்குழு மற்றும் போராட்டக் குழு இருகரம் கூப்பி அழைக்கிறது. 

இப்படிக்கு,


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.