Categories
தொடுகை மின்னிதழ் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் அறவழிப் போராட்ட

CSGAB போராட்டக்களம்: நாள் ஒன்பது

அதிகாலையில் மாணவர்களின் விடுதிக்கே சென்று அவர்களைக் கைது செய்துள்ளது காவல்த்துறை.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்ட அறிவிப்பு.

நாள் (9): 20/2/2024.

நேரம்: காலை. 9.30.

இடம்: பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புக்கு: 9380824040, 7449158045, 7904881610.

அனைவருக்கும் வணக்கம்! தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உரிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம். தீவிரமாக நடை பெற்று வரும் நம் போராட்டத்தில் பணியில் உள்ளோரும், பணி நாடுனர்களும், மாணவர்களும் பெருந்திறளாகக் கலந்துகொண்டார்கள். 

கிட்டத்தட்ட 11 மாவட்டங்களில், சென்னையில் 2 இடங்களில் நம் போராட்டங்கள் இன்று களம் கண்டன. அலைகடலெனத் திரண்ட நம் கூட்டத்தையும் ஆற்பரிப்பையும் கண்டு அதிர்ந்தது தமிழகம்.

 எனினும் அரசின் அச்சுருத்தல்கள் தொடர்ந்தன. காவலர்களாலும் மருத்துவர்களாலும் நம் உண்ணாவிரத வீரப் போராளிகள் தொல்லைகளுக்கு உள்ளாயினர். அதே நேரத்தில் மாணவர்களுக்கு அரசு விடுதிகளும் தொல்லைகள் தரத் துனிந்தன. இவற்றை எல்லாம் நம் சங்கத்தின் முன்னணிப் போராளிகள் சென்று, சரி செய்யவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

மாலை விடுவிப்புகளும் தாமதப் பட்டதால் பெண்கள் மிகவும் இன்னலுற்றனர். இப்படிப்பட்ட அச்சங்களால் நம் போராட்டத்தின் வலிமை குன்றும் என ஆள்வோர் நினைக்கிறார்கள். இல்லை இல்லை எங்கள் பலமே ஒற்றுமை என்பதனை உரக்கச் சொல்லவும், கோரிக்கைகளை வென்றெடுக்கவும் உரிமைகளை மீட்கவும் தமிழகமெங்கும் உள்ள பார்வையற்ற சமூக உறவுகள் பெறும் திரளாக கலந்து கொண்டு இந்த தொடர் போராட்டத்தை வெற்றி போராட்டமாக மாற்ற வாருங்கள் வாருங்கள் என்று உங்களை சங்க செயற்குழு மற்றும் போராட்டக் குழு இருகரம் கூப்பி அழைக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 

ஒற்றுமையின் வலிமைகொண்டு அடக்குமுரையை அடக்கிவைப்போம்.

வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை நம் சங்கம் நடத்தி வருகிறது.

இந்தப் போராட்டத்தை ஒடுக்க எவ்வளவு வேலைகள், எவ்வளவு கனிவுகள்! 

பலவீனத்தை தன் பலமாகக் கொள்ளும் அதிகார வர்கத்துக்கு நம் பலம் எதுவெனக் காட்ட இதைவிட ஒரு தருணம் வேண்டுமோ?

இந்தப் போராட்டத்திக்கு அணிதிரண்டு வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்!

வீருகொண்டு எழும்படி வீரர்ச் சிங்கங்களை விளிக்கிறோம்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு பொருள் காண வாருங்கள்!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உண்மையை உலகுக்குச் சொல்ல உங்கள் கரங்களை ஒன்று சேருங்கள்!

உருதி மிகுந்த போராட்டமே வேலையைப் பெற்றுத் தரும்!

 போராட்டம் வென்றிடுவோம், 

வெற்றி வாகை சூடிடுவோம்.

கவிதை: முனைவர் ஊ. மகேந்திரன்

பார்வையற்றோரின் பட்டினி போராட்டம் எட்டு நாளை எட்டியும் காதுக்கு செய்தி எட்டலன்னு சொல்றாங்க!

களப்போராளிகளின் சாலை விழுந்த காயம் சொல்லுதுங்க ஆனா அரசு இருட்டடிப்பு செய்யும் மாயம் புரியலைங்க!

எங்க வாழ்க்கையே விலை கொடுத்து போராடுரோம் அது நிதி நிலையில் கூட ஏறலங்க!

ஆமாங்க அந்த மூத்தவர் சர்க்காரையே தாங்குறாரு எங்க துறையின் வந்துட்டா மட்டும் சகட்டுமேனிக்கு தூங்குறாரு!

மாநிலம் முழுக்க எங்கள் உறவெல்லாம் ஒன்று கூடி திங்களையே பிளந்திருச்சு ஆனால் அது ஆளும் கண்களை சற்றும் உருத்தலங்க அந்த நயவஞ்சக நுண்களைத் தான் புரியலைங்க! 

தகப்பனுக்கு அப்போது எங்கள் துறை வெண்கொடைங்க ஆனால் தனயனுக்கு இப்போதைக்கு அது வெறும் மண் குடங்க!

அவருக்கு ஓட்டு சார்ந்த கூட்டுல தான் நாட்டம் எல்லாம் இருக்குதுங்க எங்க வாழ்க்கை படும் பாட்டு எல்லாம் கோட்டை வாசலில் பூட்டு போட்டு கிடக்குதுங்க! 

போராடக்கூடி நின்னா ஓடி வந்து தடுக்குறாங்க அரக்கப் பறக்க அள்ளி எடுத்து காத்து இல்லா மண்டபத்தில் அடைக்கிறாந்க!

அவர்கிட்ட இருப்பவங்க கேட்டு ஒன்னு சொல்லிடுங்க, 

விளிம்பு நிலையில் இருக்கும் எங்களுக்கும் சட்டம் சொல்லும் வேலையை போடாமல் இருக்கத்தான் இந்த வேலைக்கு வந்திங்களான்னு விடை தரச் சொல்லிடுங்க! 

விழியற்ற எங்களின் விரதமும் மறியலும் நாள் ஒன்பது வந்தும் முடியலந்க இவங்கதான் ஆட்சியைப் பிடிக்க வியாபாரம் செஞ்சாங்க விடியல! 

எங்களை எடுத்து சென்று நகரின் எட்ட விட்ட போது மனித உரிமை அமைப்பின் குறட்டை கேட்டுச்சுங்க!

திருட்டை தடுக்கும் போலீஸ் கூட எங்கள் இருட்டை தங்களின் முரட்டுத்தனத்தால் மேலும் இருள செய்த நேரத்திலும் நீதி தேவதையின் கண்களும் அறுலலங்க!

கிஞ்சித்தும் பாரா குணத்தை எங்களை வஞ்சித்து காட்டாதீங்க எங்கள் நெஞ்சத்து ஆக்ரோஷம் ஒன்னு கூடிச்சின்னா உங்க நிம்மதியே கெடுத்துடுங்க!

ஒன்னு மட்டும் சொல்லுறேங்க, பார்வையற்ற நாங்க ஓயமாட்டோங்க வேலை கிடைக்காமல், எண்ணிக்கையில் தேயமாட்டோங்க நீங்கள் அழைத்துப் பேசும் தேதி கிடைக்காமல்! 

ஓங்குக தமிழகம் தழுவிய பார்வையற்றோரின் ஒற்றுமை போர்க்குணம்! 

போராட்ட குணம் கொண்ட என் பார்வையற்ற சமூகத்திற்கு வீரவணக்கம் உரைக்கும் இவன்,

முனைவர் ஊ. மகேந்திரன்

ஆட்சியரகத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

https://publicapp.co.in/video/sp_1hr2avro3zckk?share=true


கவிதை: அஷோக்பாலா

மாண்புமிகு தமிழகத்தின் முதல்வரே. கலைஞரின் புதல்வரே. சமூக நீதிக் காவலரே. மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க, அவர்களின் துயர் துடைக்க, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வரே. உங்களுக்கு பார்வை மாற்றுத்திறனாளிகளின் தொடர் போராட்டம் தெரியவில்லையா??? அல்லது உங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்குள் பார்வை மாற்றுத்திறனாளிகள் இல்லையா??? சமூக நீதி என்பதே எல்லோருக்கும் சமநீதி என்பது தானே, தொடர்ந்து பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படுவது ஏன் சமூகநீதி காவலரே கூறுங்கள். எல்லோருக்கும் விடியல் ஆட்சியை கொடுக்கும் முதல்வரே. பார்வை மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை மட்டும் விடியவே இல்லையே, நாங்கள் மட்டும் என்ன பக்கத்து நாட்டு அகதிகளா கூறுங்கள். உங்கள் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு என்பது, போராடும் பார்வை மாற்றுத் திறனாளிகளை காவல்துறை கொண்டு தாக்குவது தானா சொல்லுங்கள். நாங்கள் யாசகம் கேட்டா சாலையில் அமர்கிறோம், கருணை காட்டுங்கள் என்றார் கையேந்தி நிற்கிறோம், எங்கள் உரிமையை கேட்டு வலிமையோடு போராடுகிறோம்… எங்களோடு பேச சமூக நலத்துறை அமைச்சர் தான் வருவார் என்றால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உங்களிடம் எதற்கு??? ஊடகங்களுக்கு முன்பு நீங்கள் உரக்கச் சொன்னது இன்னும் கேட்கிறது எங்கள் செவிக்குள். என்னாச்சியில் ஒரு மாற்றுத்திறனாளிகள் கூட கஷ்டப்பட மாட்டார் என்று!!! ஒவ்வொரு நாளும் கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாட்டில் வாழ்கிறோமே, எங்களை நாடு கடத்த போகிறீர்களா??? எங்கள் ஆட்சி வந்தால் மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவராய் நீங்கள் முழங்கியது, முதல்வரானதும் மறந்து போனதா சொல்லுங்கள். சட்டமன்றத்தில் பட்டியல்கள் நீல்கிறது மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் பற்றி, எங்களின் கோரிக்கைகள் மட்டும் உங்களின் திட்டங்களுக்குள் வருவதே இல்லையே ஏன்??? எங்கள் மீது நீங்கள் காட்டும் பாரபட்சமும் ஒரு வித தீண்டாமை தான். நாங்கள் என்ன தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு செலுத்தும் இயந்திரமா??? எங்களின் உரிமைகளை கேட்பது குற்றமாகுமா??? உங்களின் வாக்குறுதிகள் எங்களை வாழ வைக்காது. உங்களின் எதிர்காலத் திட்டங்கள் எங்களுக்கு அடுத்த வேலைக்கு உணவு தராது. எங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.. எங்களைத் தொடர்ந்து போராட வைப்பது தான் உங்கள் திராவிட மாடல் ஆட்சி என்றால்??? நாங்கள் தொடர்ந்து போராட தயார். வாழ்க உங்களின் திராவிட மாடல் ஆட்சி … இவன். S. அசோக் பாலா

கவிதை: முனைவர் ரா. பெரியதுரை

ஏத்தாகி இசக்கியம்மா எங்க தாயி நீ இருக்க?

 திருநெல்வேலியில் நான் இருந்து பொலம்புறது கேக்குதா தாயி

 பார்வையில்லைன்னு பார்க்காம பட்டணத்தில் அடிக்காகலாமே;

 பார்வை இல்லாத பாவி சண்டாளி எங்க போவ எங்க ஒழி யுவ?

 உனக்கு டீச்சர் வேலை கிடைக்கணும்னு தடி வீர சாமிய வேண்டிக்கிட்டேன்.

 தைரியமில்லா காவல்துறை உங்கள தடி எடுத்து தாக்குதாமே!

 டிவியில பார்த்து புட்டு தங்கச்சி அவ அழுதாளே

 பார்வையில்லா புள்ளைங்க பத்து நாளா சாப்பிடாம ஆஸ்பத்திரியில இருக்காங்கலாமே

 அவர்களும் என் புள்ளைங்க தானே அவங்க எப்படி இருக்காங்களோ?

 பாவி மவளே இசக்கி அம்மா போன் அடிச்சு பேசிற அம்மா என் ஈரக் கொலை நடுங்குதம்மா

 போலீஸ்காரன் ஓ உன் போன புடுங்கி உடைச்சுட்டாங்களோ?

 ஏய் பாவி சண்டாள அரசாங்கமே பார்வையில்லாத பிள்ளைங்களே கொன்னு தான் போடுவீங்களோ?

 டிவியில பார்க்கையில நெஞ்செல்லாம் பதறுது ஐயா

 பெத்த தாயி என் சாபம் உங்கள சும்மாதான் விடாது ஐயா.

 உங்க கொட்டம் அடங்க போகுது கோட்டை கொத்தளம் அழிய போகுது

 கோரிக்கைகள்ல கையெழுத்து போட மறுக்கிற உங்க கை விளங்காம போகப்போகுது நீங்களும் ஒரு நாள் வீதிக்கு வருவீங்க

 வேலை கொடுப்போம் என்று வாக்குத்தான் குடுத்தீங்களே

 பொய் சொன்ன உங்க வாய் அழுகித்தான் போகட்டும்

 என் கிழிஞ்ச அழுக்கு சேலை மேல சத்தியம்

 என் குல சாமி தடி வீரன் மேல சத்தியம் நீங்க விளங்கவே மாட்டீங்க

 முனைவர் ரா. பெரியதுரை..

கவிதை: செ சௌண்டப்பன்

கண்மூடித் திறந்த பார்வை,

கண்ணீரில் கரைகின்ற கனவு,

உரிமைக்காய் எழுந்த குரல்,

உறுதியாய் நின்ற மனம்.

ஒன்பது நாட்கள் ஓடின,

ஒரு துளி மாற்றமும் இல்லை,

அரசின் அலட்சியம்,

அடக்கமுடியாத ஆத்திரம்.

காவல் துறையின் கெடுபிடி,

கண்ணியம் துடைக்கப்பட்ட துயரம்,

வீதியில் விழுந்த தியாகத் துளிகள்,

வீரத்தின் அடையாளம்.

கை கோர்த்து நின்ற தோழமை,

கண்ணீரை துடைத்த கம்பீரம்,

வெற்றி வரும் என்ற நம்பிக்கை,

வீழாது நின்ற நெஞ்சம்.

களத்தில் நிற்க முடியாத என் துயரம்,

கண்ணீருடன் கைகூப்பிய பிரார்த்தனை.

உன் போராட்டம் ஓர் வரலாறு,

என் உனர்வு உன்னோடு தோழா,

வெற்றி உனக்கே என்ற வாழ்த்து,

உரிமைக்காய் நீ போராடும் போது,

உன் உனர்வுகளில் நான் உன்னோடு.

உன் போராட்டம் வெல்லட்டும்,

சமத்துவ சூரியன் உதயமாகட்டும்!

       *** செ சவுண்டப்பன்

கவிதை: முனைவர் ரா. பெரியதுரை

எதிர்கால கனவுகளோடு அமைதியாய் துயில் கொண்டிருந்த எங்கள் பார்வையற்ற இளவல்களை கல்லூரி பறவைகளை விடுதியில் சிறைப்பிடித்த வீணர்களே

 உங்களுக்கு அறநெறி தெரியுமா?? விலங்குகளை கூட தூங்கும்போது வேட்டையாடக் கூடாது என்று.

 உங்களை நள்ளிரவில் கைது செய்தால் மட்டும் கொலை கொலை என்று கூச்சலிட்டீர்களே

 ஒரு 23 ஆண்டுகளை பின்னோக்கி பாருங்கள் நாங்களும்தான் எங்கள் தானே தலைவனுக்காக கூச்சலிட்டோம் குரல் கொடுத்தோம் பாவம் இளங்குருத்துக்களை கிள்ளி போடாதீர்கள்

 காலம் உங்களை மன்னிக்காது கண்ணிழந்தவர்களின் கண்ணீர் சுடும் அது உங்களை சும்மா விடாது

 நீங்கள் இன்று அரிய அணையில் இருக்கிறீர்கள் அரியணை ஆட்டம் காணும் காலம் மிகத் தொலைவில் இல்லை

 இது நாங்கள் வயிறு எரிந்து விடுகிற சாபம் சாபம் சாபம்,,

 உங்களுக்கு நடந்தால் அது வலி எங்களுக்கு நடந்தால் அது சட்டம் விதி

 நல்லா இருக்கு சாமி நியாயம்..

 முனைவர் ரா. பெரியதுரை

தர்மபுரி மாவட்ட போராட்ட அறிவிப்பு

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பத்தாம் நாள் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்ட அறிவிப்பு.

நாள் (10): 21/02/2024.

நேரம்: காலை. 9.30.மணி

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தர்மபுரி.

தொடர்புக்கு: 8220779822, 9597784596, 8778393252, 9940226545,

The hindu news

https://www.thehindu.com/news/cities/chennai/visually-impaired-students-stage-protest-seeking-employment/article67845959.ece/amp/

https://m.edexlive.com/news/2024/feb/15/chennai-visually-impaired-protest-over-failure-to-fulfill-reservation-promise-40335.amp

Times of India News

https://timesofindia.indiatimes.com/city/chennai/protest-by-blind-students-affects-traffic-in-chennai/articleshow/107853767.cms

புகைப்படங்கள் நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.