Categories
தொடுகை மின்னிதழ் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் அறவழிப் போராட்ட

CSGAB போராட்டக்களம்: நாள் ஏழு

எழுச்சியுறுகிறது போராட்டம்

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு.

நாள் (7): 18/2/2024.

நேரம்: காலை. 10.30.

இடம்: பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புக்கு: 7449158045, 7904751694.

அனைவருக்கும் வணக்கம்! தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உரிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம். தீவிரமாக நடை பெற்று வரும் நம் போராட்டத்தின் விளைவாக இன்று மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் அவர்கள் நம்மை அழைத்து பேசினார். ஆனால் நம் பணி சார்ந்த எந்த வித கோரிக்கைகளையும் நிறைவேற்று தருவதாக வாக்குறுதி அளிக்கப்படவில்லை மாறாக மழுப்பல் பதிலாகவே இருந்தது. மேலும் அவர் ஐந்து நபர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவது தெரியாது என்று அமைச்சரும் நம் துறை செயலரும் தெரியாது என்று கூறி விட்டனர்.

திமிரின் உச்சமாக நம் மாற்றுதிறனாளிதுறை இயக்குனர் அவர்கள் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உண்ணாவிரதம் இருந்த கொண்டு இருக்குவர்களை உணவு அறிந்து விட்டார்கள் என்று கூறி அலட்சியம் செய்து விட்டார் .

 கோரிக்கைகளை வென்றுடுக்கவும் உரிமைகளை மீட்கவும் தமிழகமெங்கும் உள்ள பார்வையற்ற சமூக உறவுகள் பெறும் திரளாக கலந்து கொண்டு இந்த தொடர் போராட்டத்தை வெற்றி போராட்டமாக மாற்ற வாருங்கள் வாருங்கள் என்று உங்களை சங்க செயற்குழு மற்றும் போரட்டகுழு இருகரம் கூப்பி அழைக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஒன்று படுவோம் வென்று காட்டுவோம் 

வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை நம் சங்கம் நடத்தி வருகிறது.

இந்த போராட்டத்தை ஒடுக்க எவ்வளவு வேலைகள், எவ்வளவு கனிவுகள்! 

பலவீனத்தை தன் பலமாகக் கொள்ளும் அதிகார வர்கத்துக்கு நம் பலம் எதுவெனக் காட்ட இதைவிட ஒரு தருணம் வேண்டுமோ?

இந்த போராட்டத்திக்கு அணிதிரண்டு வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்!

வீருகொண்டு எழும்படி வீரர்ச் சிங்கங்களை விளிக்கிறோம்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு பொருள் காண வாருங்கள்!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உண்மையை உலகுக்குச் சொல்ல உங்கள் கரங்களை ஒன்று சேருங்கள்!

உருதி மிகுந்த போராட்டமே வேலையைப் பெற்றுத் தரும்!

 போராட்டம் வென்றிடுவோம், 

வெற்றி வாகை சூடிடுவோம்.



Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.