Categories
தொடுகை மின்னிதழ் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் அறவழிப் போராட்ட

CSGAB போராட்டக்களம்: நாள் ஆறு

அமைச்சரோடான பேச்சுவார்த்தையில் தீர்வு கிட்டுமா?

பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் இன்று பேச்சுவார்த்தை!!

Sat Feb 17 04:22:00 UTC 2024

தினகரன்

சென்னை : சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் இன்று காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார் அமைச்சர் கீதாஜீவன். 1% ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடைபெறுகிறது.

கவிதை: திராவிட மாடல் சாதனைகள்.

மாற்றுத்திறனாளிகளை மாற்றான்தாய் பிள்ளைகளாய் நடத்துவது.

நேற்றுவரை நாங்கள் அத்தனை செய்தோம் என்று பிதற்றுவது

உரிமையைக் கேட்டால் உருட்டுத்தடிகொண்டு அடக்குவது.

அமைதிவழியில் போராடுவோரை அதிகாரத்தால் மிரட்டுவது

பார்வையற்றோரை காவலர்கொண்டு நல்லிரவுவரை விரட்டுவது.

ஐந்துநாளும் போராடி உடையும் தடியால் அடிபட்டு

உடல்தான் நலிந்து போனது -எங்கள்

உள்ளம் வலிமையானது.

விடியல் அரசே! விழிக்கவில்லையா உங்கள் கண்கள்?

பார்வை மாற்றுத்திறனாளி காட்டும் ஒற்றுமை கண்டஞ்சி

நீங்கள் ஏவிய காவலர்கள் நிகழ்த்திய வன்முறையை பாற்பதற்கு

விடியல் அரசே! விழிக்கவில்லையா உங்கள் கண்கள்?

போராட்டங்கள் பலகண்ட பார்வையற்றோர் உறுதி காண

தகுதிக்கான வேலைகேட்டு உரிமைக்கான முழக்கம் செய்து

வீதியில் இறங்கிப் போராட சாதனைகண்ட

விடியல் அரசே! விழிக்கவில்லையா உங்கள் கண்கள்?

தடிக்கும் அஞ்சோம் காவலர் அடிக்கும் அஞ்சோம்

துடிக்கும் உரிமைக் குரல் விழவில்லையா?

உங்கள் தடித்த செவிக்குள் புகவில்லையா?

போராடும் எங்கள் குறைகேட்டு

பதிலுரைக்க வாய்யில்லையா?

உதவிடத்தான் கரமிலையா?

ஓடிவந்து உதவிடத்தான்

 கால்கள் இரண்டிலையா?

இல்லை நீங்களும்

எங்களைப்போல் மாற்றுத் திறனாளியா?

என்றால் வாருங்கள்

உங்களுக்கும் சேர்த்தே நாங்கள் போராடுகிறோம்

விடியல் அரசே! திராவிட மாடலே!.

      இவன் கவிஞன்

தமிழ்க் காதலன்..

விழிச் சவால் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்துக்கான காரணத்தை ஆராய்ந்து, அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் கீதா ஜீவன் 

https://www.vikatan.com/government-and-politics/protest/visually-challenged-people-continue-their-protest-6th-day-for-9-requests-to-govt


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.