போராட்ட அறிவிப்பு.
நாள் (3): 14/2/2024.
நேரம்: காலை. 9.30.
இடம்: பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புக்கு: 7449158045, 7904751694.
அனைவருக்கும் வணக்கம்! தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உறிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம்.
ஆனால் இன்று உறிமை மீரல்கள் அரங்கேறி இருக்கிறது. நமது மாற்றுத்திறணாளிகள் ஆணையரகத்திலேயே நாம் போராட்டத்தினைத் தொடர்ந்து நடத்தவும், இரவு காத்திருக்கவும் நமக்கு உறிமை மருக்கப்பட்டிருக்கிறது. நேற்று போல் இன்றும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சில உதிர்ந்த சருகுகளை ரகசியமாய் பொருக்கி தன்னுள் உண்மைகளாக வைத்துக்கொண்டது. அதே அலைக்கழிப்பு அதே அத்து மீரல்! ஞாயங்களைக் கேட்டுப் பெறுவதில் தாமதம் ஏன்?
வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்சக் கோறிக்கைகளை மையப்படுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை நம் சங்கம் நடத்தி வருகிறது.
இந்த போராட்டத்தை ஒடுக்க எவ்வளவு வேலைகள், எவ்வளவு கனிவுகள்!
பலவீனத்தை தன் பலமாகக் கொள்ளும் அதிகார வர்கத்துக்கு நம் பலம் எதுவெனக் காட்ட இதைவிட ஒரு தருணம் வேண்டுமோ?
இந்த போராட்டத்திக்கு அணிதிரண்டு வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்!
வீருகொண்டு எழும்படி வீரர்ச் சிங்கங்களை விளிக்கிறோம்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு பொருள் காண வாருங்கள்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உண்மையை உலகுக்குச் சொல்ல உங்கள் கரங்களை ஒன்று சேருங்கள்!
உருதி மிகுந்த போராட்டமே வேலையைப் பெற்றுத் தரும்!
போராட்டம் வென்றிடுவோம்,
வெற்றி வாகை சூடிடுவோம்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
