பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு.
நாள் (2): 13/2/2024.
நேரம்: காலை. 10.00.
இடம்: மானில மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் திருவல்லிக்கேணி.
தொடர்புக்கு: 7449158045.
அனைவருக்கும் வணக்கம்!
தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உறிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம். நம் சங்கம் நடத்தும் போராட்டம் சங்கத்தை வளர்த்தெடுக்க அல்ல, சங்க உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த.
போராட்டம் என்னும் வித்தூன்றி, எழிட்சி என்ற வேர் பிடித்து, உறுப்பினர்களின் ஒற்றுமை என்ற விழுதுகள் தாங்க ஆலமரமாய் நிற்கிறது நம் சங்கம்.
வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்சக் கோறிக்கைகளை மையப்படுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை நம் சங்கம் நடத்தி வருகிறது.
இந்த போராட்டத்தை ஒடுக்க
எவ்வளவு வேலைகள்,
எவ்வளவு கனிவுகள்!
இருட்டு அரைத் தாக்குதல்கள்,
முறட்டு வெரியர்களின் மூர்கங்கள்!
பிரித்தாளும் தந்திரங்கள்,
அச்சுருத்தும் ஆந்தைத் தனங்கள்!
நள்ளிரவில் நடந்தவை எதுவும் நாடறியாதோ, நகர் அறியாதோ! நாம் அறியோம்!
ஆனால் கேளாம்பாக்கமும், கோயம்பேடும் நன்கறியும்!
ராத்திரியின் மாயங்கள், ஆனால்
விடியலின் சாட்சியமாய் காயங்கள்!
பட்டினிக் கிடந்தோரைப் பாடாய் படுத்திய கொடுமைகள்!
ஞாயம் கேட்கப் போகின்றோம், காவலர் சதியை முரியடிப்போம்.
இந்த போராட்டத்திக்கு அணிதிரண்டு வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்!
வீருகொண்டு எழும்படி வீரர்ச் சிங்கங்களை விளிக்கிறோம்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு பொருள் காண வாருங்கள்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உண்மையை உலகுக்குச் சொல்ல உங்கள் கரங்களை ஒன்று சேருங்கள்!
உருதி மிகுந்த போராட்டமே வேலையைப் பெற்றுத் தரும்!
ஆகவே மானில மாற்றுத் திறணாளிகள் நல அலுவலகத்துக்கு அனைவரும் வாருங்கள்!
போராட்டம் வென்றிடுவோம்,
வெற்றி வாகை சூடிடுவோம்.
***முனைவர். சே. திவாகர்.
போராட்டம் குறித்த பார்வையற்றவன் முகநூல்ப்பதிவு
https://www.facebook.com/share/p/6NbLS88Rw94QAHo1/?mibextid=I6gGtw
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளலாமா? – ம.வி.ராசதுரை.
——————————————–ஒன்பது அம்ச கோரிக்கையை முன்வைத்து அமைதியான வழியில் நேற்று (12.02.24) சென்னை ,வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளை நேற்று இரவு 7 மணி அளவில் போலீசார் கைது செய்து ஐந்து வாகனங்களில் ஏற்றி சென்னை மாநகரின் பல இடங்களுக்கு கொண்டு சென்று அலைக்கழித்துள்ளார்கள்.
நள்ளிரவு இரண்டு மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அவர்களை கொண்டு போய், வேலூர் செல்ல தயாராக இருந்த ஒரு பேருந்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி விட்டுள்ளார்கள்.
ஓட்டுநர், நடத்தினரிடம் வழியில் இவர்கள் எங்கும் இறங்கி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள்.
வேலூர் செல்ல தங்களுக்கு விருப்பமில்லை என்று வலுக்கட்டாயமாக அவர்கள் வாதிட்டவுடன், வேறு வழியின்றி ஆள் நடமாட்டம் இல்லாத தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3.00 மணியளவில் அவர்கள் இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.
பார்வை இல்லாத அந்த ஜீவன்கள் தட்டுத் தடுமாறி மனக்குமுறலுடன், சென்னை திரும்பி, சென்னை, ராணி மேரி கல்லூரி அருகில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையரகம் முன்பு நீதிகேட்டு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கேட்பது, ஆசிரியர் வேலை வாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு உள்பட சட்டத்தில் உள்ள தங்களுக்கான சலுகைகளை வழங்குங்கள் “என்பது தான்.
“உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கிறோம் “என்ற வாக்குறுதியை வருடக் கணக்கில் கேட்டு கேட்டு புளித்துப் போன அவர்கள் வேறு வழியின்றி போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
“எங்கள் பிரதிநிதிகள் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். அவரிடம் எங்கள் கோரிக்கையை முன் வைத்துவிட்டு போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம்” என்கிறார்கள்.
இந்த கோரிக்கைக்கு செவிமடுக்காமல் பழையபடி நேற்று போல இன்று (13.02.24) இரவும் கைது செய்து அதேபோல ஒரு அரசு பேருந்தில் ஏற்றி சற்று முன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளார்கள்.
அதிமுக ஆட்சியிலும் இதே போல மாற்றுத்திறனாளிகளை கைது செய்து சுடுகாட்டில் இறக்கி விட்டுச் சென்றார்கள்.அந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசாரை கடுமையாக கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளை கைது செய்யும்போது காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளது.
அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தொடர்ந்து இரண்டாவது நாள் இரவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை சென்னை மாநகர போலீசார் அலைக்கழித்துள்ளார்கள்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் கரிசனம் காட்டப்பட வேண்டியவர்கள்.
அவர்கள் போராட்டத்தை நிறுத்துவதற்கு இப்படிப்பட்ட வழிமுறைகளை சென்னை மாநகர போலீசார் மேற்கொள்வது
நியாயமற்றது, அநீதியானது, கண்டிக்கத் தக்கது.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
