Categories
தொடுகை மின்னிதழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

அண்மை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கமல் கிஷோர் மாற்றம்: புதிய இயக்குநர் யார்?

உரையாடலும் உரையாடல் நிமித்தமுமாய் ஒரு தளம்.
https://thodugai.in

நேற்று (ஜனவரி 27, 2024) சில ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு

ஆணை

பிறப்பித்துள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த திரு. கமல்கிஷோர் இஆப அவர்கள், தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக, தமிழ்நாடு எழுதுபோருள் மற்றும் அச்சகத்துறையின் இயக்குநராக உள்ள திருமதி. M. லட்சுமி இஆப நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி. M. லட்சுமி ஐஏஎஸ்

நவம்பர் 9, 1973ல் பிறந்த இவர், கடந்த 2009ஆம் ஆண்டு, தமிழ்நாடு நிர்வாகத்துறையில் பணியில் சேர்ந்தார். 2013 ஆம் ஆண்டு, ஐஏஎஸ் ஆக (SCS) பதவி உயர்வு பெற்ற இவர், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதன்மை அலுவலர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் இணைச் செயலர், கால்நடைத்துறையின் இயக்குநர் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.