Categories
காணொளிகள் தொடுகை மின்னிதழ்

கொண்டாட்டம்: கூடி உரையாடலாம் பாப்பா

காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை வழங்குங்கள்.

உடனிருக்கும் தெய்வம்,

உண்மையின் வடிவம்,

பூடக மொழி பூஜ்யம்,

பூந்தளிர் வன ராஜ்யம்,

பாசாங்கில்லாப் பார்வை,

பாவனையில்லாச் சொற்கோவை.

இப்படிக் குழந்தைகளை வர்ணித்துக்கொண்டே இருக்கலாம்.

அவர்களைக் கொஞ்சலாம், மெச்சலாம், அறிவுரை சொல்லலாம். ஆனால் உரையாடுதல்?

அதற்கு குழந்தைகளோடு நாமும் ஒரு குழந்தையாக வேண்டும் என்பதே மிகமிக முக்கியமான முன் நிபந்தனை.

அப்படி ஒரு முயற்சியை இந்தக் குழந்தைகள் நாளில் முன்னெடுத்திருக்கிறது தொடுகை யூட்டூப் சேனல்.

எத்தனை உரையாடினாலும் இன்னும் இன்னும் எனத் தீரா வாஞ்சையைத் தோற்றுவிக்கிற குழந்தைகள்.

அவர்களுக்குக் குறைகள் என்று எதுவும் இல்லை. யார்மீதும் புகார் இல்லை. இயற்கையில் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற வாழ்வில், தங்களுக்கான வழிகளைத் தாங்களே செப்பனிட்டு உலவிவரும் அவர்களிடம் கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் எத்தனை எத்தனை சிந்தனைகள் இருக்கின்றன என்பதை உரையாடும்போதுதான் உணர முடிகிறது.

இறுகிவிட்ட நம் இதயங்களை இலகாக்குகின்றன அவர்களின் குரல்மொழிகள். கேட்டுப்பாருங்கள்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடுகை மின்னிதழ் சார்பாக இனிய குழந்தைகள்தின வாழ்த்துகள்.

எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற, வாட்ஸ் ஆப் வாயிலாக எங்களோடு இணையுங்கள்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.