Categories
அரசின் செய்திக்குறிப்புகள் தொடுகை மின்னிதழ்

முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நல ஆலோசனை வாரியக்கூட்டம்

பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்ப, thodugai@gmail.com

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா. எழிலன், திரு. ஏ.ஜி. வெங்கடாச்சலம், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திரு. கமல் கிஷோர், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள், மாநில ஆலோசனை வாரியக் குழுவினுடைய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு பணிகளின் நிபுணர்கள், மாவட்ட உறுப்பினர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள், அலுவல் சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு எண்:2088
நாள்:16.10.2023
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனது தலைமையுரையில், மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகளை காப்பதற்கான ஒப்பந்தத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் கையெழுத்திட்டு, ஒன்றிய அரசு மேற்கொண்ட தீர்மானத்தினை நிறைவேற்றும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதை
தெரிவித்து, அதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னோடி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள்.
சிறப்புக்கல்வி
மேம்பாட்டிற்கான
குறிப்பாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஆரம்ப பயிற்சி மூலம் தடுப்பு நடவடிக்கைகள், உதவித்தொகை இரட்டிப்பாக்குதல், தன்னார்வத் தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல், 4% இட ஒதுக்கீடு மூலம் பணியிடங்கள் நிரப்பும் நடவடிக்கை
மேற்கொள்ளுதல், அரசு பொது கட்டிடங்களில் தடையற்ற சூழலை ஏற்படுத்துதல்,
மனநலம் பாதிப்படைந்த பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்தல் மற்றும் மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தல், மகளிர் உரிமைத்தொகை வழங்குதல் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்பட்டு வரும் "உரிமைகள் திட்டம்", செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து வாரிய உறுப்பினர்கள் கருத்துகள் தெரிவிக்கும் நிகழ்வில், மனநலம் பாதிப்படைந்தோருக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் முறையினை முறைப்படுத்துதல், செவித்திறன் பாதிப்படைந்தோருக்கு நிரந்தர சான்றிதழ் வழங்குதல், சிறப்புகல்வி மேம்பாடு. பத்து வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கு மாற்றாக மீண்டும் தேவைப்படுவோருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குதல், முதுகு தண்டுவடம் பாதிப்படைந்தோருக்கு
மறுவாழ்வு சேவை கிடைக்கப் பெறுதல், "உரிமைகள் திட்டத்தை" அனைத்து பின் தங்கிய மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்துதல், மனவளர்ச்சி குன்றியோருக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் உறுப்பினர்களால் வழங்கப்பட்டன.
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.ஏ.ஜி.
டாக்டர் நா. எழிலன்,
வெங்கடாசலம் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பேசினர். அலுவல் சாரா உறுப்பினர்கள் அரசின் திட்டங்களை பாராட்டியும், அரசுக்கு சில கோரிக்கைகளையும், கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர். அவை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் வாரிய உறுப்பினர்களை அறிமுகம் செய்தார்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., வாரியக் கூட்டத்தின் உறுப்பினர்களை வரவேற்று, அரசு முன்னோடி திட்டங்கள் வகுக்க வாரிய உறுப்பினர்கள் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் திரு. ஏ. கே. கமல் கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் விளக்கி பேசினார்.
இறுதியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணை இயக்குநர் திருமதி ஜெயஷீலா அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள :
Indiprnews
tndiprtndipr
TN DIPR
www.dipr.tn.gov.in


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.