வந்து போன கரோனா காலத்துல வயிறு புகையப் புகையப்
போர்வைக்குள்ள முடங்குனவன் பலர், பொழுது போகாம அடுப்ப மூட்டி போட்டி அப்பலம் வறுத்துத் தின்னவன் சிலர்.
புழுதி படிஞ்ச புக்கையெல்லாம் புரட்டி பார்த்த பாவத்துக்கு
எழுதித் தள்ள உட்கார்ந்தான் பலர், அதில்
எழுத்தாளர் ஆனவனும் சிலர்.
நோவுச்செய்தி, சாவுச்செய்தி, நொடிச்சுப்போன நட்டச் செய்தினு
நெஞ்சப் பிளக்கிற கொய்யோ மொரியோதான் நித்தம் – இடையிடையில
பஞ்சுப்பொதிக்குள்ள குவாக்குவானும் சத்தம்.
நுட்பமாத் தொழில் செஞ்சவனையெல்லாம்
நொடிப்பொழுதுல நொறுக்கிப்போட்டு,
சிற்பக் கலைக்கூடமா
சிரிச்சு சிலுத்த குடும்பங்களைச்
சின்னாபின்னமா செதைச்சுப்போட்ட
கரோனாங்கிற காலச்சாத்தான் கண்ணுல,
தொழில்நுட்ப விரல ஆட்டி,
துக்கத்தையெல்லாம் தூர ஓட்டி,
கண்ணு தெரியாதவன் போட்டுக்கிட்டான் பல ரூட்டு;
அதுல கவுந்திடாம பயணம் போகுது ஒரு தாட்டு.
மூனு வருஷப் பயணம்,
முழுகிடாத கவனம்,
சவுண்டில்ல்ஆத இஞ்ஜின் வச்ச காரு,
கிரவுண்டில அதுக்கு ஆன்சலிவன்னு பேரு.
என்ன பாஸ்! ரொம்ப டாப் கியர்ல போய்ட்டோமோ? வேண்டாம்,
வேண்டவே வேண்டாம்.
வேகம் நமக்கு ஆகாது; ஆகவே கொஞ்சம் ஆசுவாசமாய்
இளைப்பாறிக்கொள்ள, , , , , ,

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் மூன்றாம் ஆண்டு விழா
நாள்: அக்டோபர் 1, 2023, ஞாயிற்றுக்கிழமை,
முற்பகல் 10.30 மணி.
இடம்: ஜூம் அரங்கம்.
நிகழ்ச்சிக்கான இணைப்பு:
https://us06web.zoom.us/j/81198574301?pwd=0KPOQkpqPFcn2OsgfN8pscBaIwpsSr.1
மீட்டிங் குறியீடு: 811 9857 4301
கடவுக்குறி: 2023
சிறப்பு விருந்தினர்கள்:
திருமதி. கோமதி அவர்கள்,
துணை நிறுவனர்: மெய்ப்பொருள் அமைப்பு. மற்றும்
செல்வி ரேவதி மெய்யப்பன் அவர்கள்.
ஊடகத் தோழமை: தொடுகை மின்னிதழ்.
யூட்டூப் நேரலைக்கு:
https://www.youtube.com/@thodugai
வாருங்கள்! வாருங்கள்!
உங்கள் வாழ்த்தினைத் தாருங்கள்!
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on “அறிவிப்பு: பெரியோர்களே! தாய்மார்களே! பேரன்பு கொண்ட இளைஞர்களே!”
எண்ணற்ற அரசு பணியாளர்களை உருவாக்கி இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
LikeLike