Categories
அஞ்சலி தொடுகை மின்னிதழ்

அஞ்சலி: முருகராஜன்

அன்னாருக்கு தொடுகையின் சார்பில் அஞ்சலிகள்.

முருகராஜன்
முருகராஜன்

முதுகலைத் தமிழாசிரியர்; இசை, கவிதை, உரைநடை எனப் பல்துறைக் கலைஞராய்த் திகழ்ந்தவர்.

தொழில்நுட்ப யுகத்துக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர் என்றாலும்கூட, விரைவாகவும் துல்லியமாகவும் கணினி மற்றும் செல்பேசி உள்ளடக்கங்களைக் கற்றுத்  தனதாக்கிக்கொண்டவர்.

வள்ளுவன் பார்வை மின்னஞ்சல் குழுமத்தின் தொடக்க காலகட்டத்தில் இவர் மேற்கொண்ட புதுமையான முயற்சிகளும் உழைப்பும் என்றும் நினைவுகூரத்தக்கது.  தமிழ்த்திரைப்படங்களைப் பார்வையற்றோரும் புரிந்துகொள்ளும் வண்ணம், ஒலிவழிக் காட்சிவிவரணை அமைப்பதில் ஆர்வம் கொண்டு உழைத்தவர்.

நாடகங்கள், கவிதை, செய்தித்தொகுப்புகளைத் தொழில்நுட்பத் துணைகொண்டு ஒலிச்சித்திர வடிவில் வழங்கியவர்.

கலைக்கூடல், K.K. Tech போன்ற வாட்ஸ் ஆப் குழுமங்களை ஏற்படுத்தி, பார்வையற்றோரிடையே தொடர்ந்து கலை மற்றும் தொழில்நுட்பச் சிந்தனையைப் புகுத்திவந்த திரு. முருகராஜன் (57) அவர்கள், நேற்று முன்தினம் (6.செப்டம்பர்.2023) அன்று பிற்பகல் இரண்டு மணியளவில்  இயற்கை ஏய்தினார்.

அன்னாருக்கு தொடுகையின் சார்பில் அஞ்சலிகள்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.