Categories
அண்மைப்பதிவுகள் அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் கல்வி தொடர்பான அரசாணைகள் தொடுகை மின்னிதழ்

இரு மடங்கானது மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

பார்வையற்றோர் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்களுக்கு:

https://thodugai.in

அரசாணையைப் பதிவிறக்க:

4. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகையாக அவர்கள் பயிலும் வகுப்பு / படிப்பிற்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ரூ.1,000/- முதல் ரூ.7,000/- வரை கடந்த 2013-2014-ஆம் நிதி ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்றும் மேற்படி புதிய அறிவிப்பினை தொடர்ந்து, மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை அவரவர் பயிலும் வகுப்புகளுக்கு ஏற்றவாறு இரண்டு மடங்காக உயர்த்தியும் இத்திட்டத்திற்கு ரூ.14,90,52,000/- நிதி ஒதுக்கீடு வழங்குமாறும் அரசினைக் கோரியுள்ளார்.
5. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் செயற்குறிப்பினை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்று, மாற்றுத்திறன் மாணாக்கர்களின் சிறப்பு கல்வியினை ஊக்குவித்திட ஏதுவாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் ஆண்டு முதல் கீழ்க்கண்டவாறு உயர்த்தியும் இத்திட்டத்திற்கு ரூ.14,90,52,000/- (ரூபாய் பதினான்கு கோடியே தொண்ணூறு இலட்சத்து ஐம்பத்தெரண்டாயிரம் மட்டும்) ஒப்பளிப்பு செய்தும் ஆணையிடுகிறது. மேலும், இச்செலவினத்தை 2023-2024-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்க மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது:-
கல்வி உதவித் தொகை
ஏற்கனவே வழங்கப்படும்
வருடாந்திர
தற்போது இரட்டிப்பாக்கி
வழங்கவுள்ள
வருடாந்திர
உதவித் தொகை
(ரூபாயில்)
வ.
வகுப்பு
எண்
உதவித் தொகை
(ரூபாயில்)
1.
1-5-ஆம் வகுப்பு வரை
1,000/-
2,000/-
2.
6- 8-ஆம் வகுப்புவரை
3,000/-
6,000/-
3.
9-12 ஆம் வகுப்பு வரை
4,000/-
8,000/-
4.
பட்டப்படிப்பு
6,000/-
12,000/-
5.
தொழிற்கல்வி
மற்றும்
7.000/-
14,000/-
முதுகலை பட்டம்
6.மேலே பத்தி 5-இல் ஒப்பளிப்பு செய்யப்பட்ட தொகை பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்படவேண்டும்:-
-
"2235 - சமூகப் பாதுகாப்பும் நலனும் - 02 சமூக நலன் - 101 மாற்றுத்திறனாளிகள் நலன் மாநிலச் செலவினங்கள் - BB மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்குப் படிப்புதவித் தொகைகள் 312 படிப்பு உதவி தொகைகளும், பயிற்சி உதவித் தொகைகளும் - -09 ஏனையவை"
(IFHRMS DPC: 2235-02-101-BB-31209)"
7. மேலே பத்தி 5-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தில் ரூ.7,95,02.000/- 2023-2024-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டிலிருந்து மேற்கொள்ள வேண்டும். மீதமுள்ள தொகை ரூ.6,95,50,000/- கூடுதல் நிதியொதுக்கம் ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.