தமிழக அரசின் முந்தைய ஆணை ரத்து, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஆகிறார் திரு. A.K. கமல்கிஷோர்

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது
Kamal kishore A.K.

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ன்படி, கூடுதல் அதிகாரங்கள் கொண்ட, அரசின் சிறப்புச் செயலர் என்று அழைக்கப்படும் பணியிடம் தற்காளிகமாகத் தோற்றுவிக்கப்பட்டு, திருமதி. ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப. அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிறப்புச் செயலர் மற்றும் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

அத்தோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த திரு. வினித் இ.ஆ.ப. அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்படுவதாகக் கடந்த 16.மே.2023 அன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (22.மே.2023) தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி, செங்கல்பட்டு ஆட்சியராக திரு. A.K. கமல்கிஷோரை நியமித்த ஆணை ரத்து செய்யப்பட்டு, அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு. A.K. கமல்கிஷோர், யார் இவர்?

Kamal Kishore A.K.

பிறப்பு-25/ஏப்ரல்/1984

மாநிலம்-கேரளா.

2015 பேட்ஜ் ஐஏஎஸ் ஆன இவர், நாகப்பட்டினம் உதவி ஆட்சியராகப் பொறுப்பேற்றார். 2019ல் கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் முகமையின் உயர் அலுவலராகப் பொறுப்பு வகித்தார்.

தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பணியாற்றும் இவர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுப் பின் அந்த ஆணை ரத்து செய்யப்பட்ட நிலையில்,  தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Kamal Kishore A.K. on twitter

Kamal Kishore A.K. on linkedin

தமிழக அரசின் நேற்றைய ஆணையைப் படிக்க மற்றும் பதிவிறக்க:

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *