600க்கு 590, சென்னையில் பார்வையற்ற மாணவர் சாதனை

600க்கு 592, சென்னையில் பார்வையற்ற மாணவர் சாதனை

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது
குகன்

இன்று (08/05/2023) வெளியான பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில், 600க்கஉ 592 மதிப்பெண்கள் பெற்று பார்வையற்ற மாணவர் சாதனைபடைத்துள்ளார். சென்னை அம்பத்தூரில் அமைந்திருக்கும் சேதுபாஸ்கரா மேல்நிலைப்பள்ளியில் உள்ளடங்கிய கல்வித்திட்டத்தில் 12ஆம் வகுப்புப் படித்து வருபவர் பார்வையற்ற மாணவர் குகன். இவர் இன்று வெளியான 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

குகன், வணிகவியல், கணக்குப் பதிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

லயோலா கல்லூரியில் சேர்ந்து வணிகவியல் படிக்க விரும்பும் குகனின் அப்பா காவல்த்துறையில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றுகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, தற்போது மெல்ல குணமடைந்து வருகிறார் குகனின் அம்மா.

குகனின் எதிர்காலக் கனவுகள் அனைத்தும் நிறைவேறிட அவரை வாழ்த்துகிறது தொடுகை.

மாணவர் குகனைத் தொடர்புகொள்ள: 9445149227

பகிர

1 thought on “600க்கு 592, சென்னையில் பார்வையற்ற மாணவர் சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *