
கடந்த 13.அக்டோபர்.2022 அன்று ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய அங்கமான உலக சுகாதார நிறுவனம் (WHO) பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றிய முக்கிய தரவுகளை வெளியிட்டது. அந்த அறிக்கையின் தமிழாக்கம் இது.
1. பார்வைக்குறைபாடு என்பது அதனுடன் தொடர்புடைய உற்பத்தித்திறன் இழப்புகளில், 411 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டு, வருடாந்திர உலகளாவிய செலவுகளின்படி மிகப் பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
2. பார்வைக்குறைபாடு மற்றும் பார்வையின்மைக்கான முக்கிய காரணங்கள் யாதெனில், சரிசெய்யப்படாத ஒளிவிலகலின் பிழைகள் (uncorrected refractive errors) மற்றும் கண் புரைகள் (cataracts)ஆகியவை எனலாம்.
3. பார்வைக்குறைபாடு மற்றும் பார்வையின்மை உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இருப்பினும், பார்வை இழப்பு எல்லா வயதினரையும் பாதிக்கும்.
4. உலகளவில், குறைந்தது 2.2 பில்லியன் மக்கள் கிட்ட அல்லது தொலைதூரப் பார்வைக்குறைபாட்டைக் கொண்டுள்ளனர். குறைந்தது 1 பில்லியன் – அல்லது கிட்டத்தட்ட அதில் பாதி – இந்த விடையத்தில் , பார்வைக்குறைபாடு தடுக்கப்பட்டிருக்க முடியும் அல்லது இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கிறது.
வரையறைகள்
நோய்களின் சர்வதேச வகைப்பாடு பார்வைக்குறைபாட்டை தொலைவு மற்றும் கிட்டப்பார்வைக்குறைபாடு என இரண்டு பிரிவுகளாகப் பகுக்கிறது.
தூரப்பார்வைக் குறைபாடு:
1. லேசானது. – பார்வைக் கூர்மை 6/12 முதல் 6/18 வரை மோசமாக உள்ளது.
2. மிதமானது. – பார்வைக் கூர்மை 6/18 முதல் 6/60 வரை மோசமாக உள்ளது.
3. கடுமையானது. – பார்வைக் கூர்மை 6/60 முதல் 3/60 வரை மோசமாக உள்ளது.
4. பார்வையின்மை. – பார்வைக் கூர்மை 3/60 ஐ விட மோசமானது.
கிட்டப்பார்வைக் குறைபாடு:
கிட்டப்பார்வைக் குறைபாடு என்பது 40cm இல் N6 அல்லது M.08 ஐ விட மோசமான பார்வைக் கூர்மையை கொண்டுள்ளது.
ஒரு நபரின் அனுபவத்தில் பார்வைக்குறைபாடு என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சை வாய்ப்புகள், அணுகக்கூடிய பார்வை மறுவாழ்வுக்கான வாய்ப்புகள், குறிப்பாக (கண்ணாடிகள் அல்லது வெண்கோல்கள் போன்ற உதவி பொருட்கள்), மற்றும் அணுக முடியாத கட்டடங்கள், போக்குவரத்து மற்றும் தகவல்கள் ஆகியவற்றில் ஒரு நபர் சிக்கல்களை எதிர்கொள்கிறாரா உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
நிலவரம்:
உலகளவில், குறைந்தது 2.2 பில்லியன் மக்கள் கிட்ட அல்லது தொலைதூரப் பார்வைக் குறைபாட்டைக் கொண்டுள்ளனர். குறைந்தது 1 பில்லியன் – அல்லது கிட்டத்தட்ட பாதி – இந்த நிகழ்வுகளில், பார்வைக் குறைபாடு தடுக்கப்பட்டிருக்க முடியும் அல்லது இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கிறது.
இந்த 1 பில்லியன் மக்களுக்கு மிதமான அல்லது தீவிரமான தூரப்பார்வைக் குறைபாடு அல்லது கவனிக்கப்படாத ஒளிவிலகல் பிழை (88.4 மில்லியன்),
கண்புரை (94 மில்லியன்),
வயது தொடர்பான கண்ணின் மையப்பகுதியில் ஏற்படும் சிதைவு (macular degeneration) (8 மில்லியன்),
கன்னழுத்த நோய் (glaucoma) (7.7 மில்லியன்),
நீரிழிவு விழித்திரை நோய் (diabetic retinopathy) ( 3.9 மில்லியன்)
அத்துடன் கவனிக்கப்படாத மூப்புப்பார்வை (presbyopia) (826 மில்லியன்) போன்றவை காரணமாக பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
பிராந்திய வேறுபாடுகளின் அடிப்படையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள பகுதிகளில் தூரப்பார்வைக் குறைபாட்டின் பாதிப்பு என்பது, அதிக வருமானம் உள்ள பகுதிகளைவிட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கிட்டப்பார்வையைப் பொறுத்தவரை, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய துணை-சஹாரா ஆப்பிரிக்காவில், கவனிக்கப்படாத பார்வைக் குறைபாட்டின் விகிதங்கள் 80%க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா மற்றும் அதிக வருமானம் கொண்ட பகுதிகளில் ஒப்பீட்டு விகிதங்கள் ஆசியா-பசிபிக் 10% (2)க்கும் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் வயோதிகம் ஆகியவற்றால் அநேகர் பார்வைக் குறைபாட்டு ஆபத்தை எதிர்நோக்குவதாக அஞ்சப்படுகிறது.
காரணங்கள்:
உலகளவில், பார்வைக் குறைபாட்டிற்கான முக்கியக் காரணங்கள்:
1. வயது தொடர்பாக ஏற்படும் விழிப்புள்ளிச் சிதைவு (Macular degeneration).
2. கண் புரை.
3. நீரிழிவு ஏற்படுத்தும் விழித்திரை பாதிப்பு.
4. கண் அழுத்த பாதிப்பு (Glaucoma).
5. சரிசெய்யப்படாத ஒளிவிலகல் பிழைகள்.
நாடுகளுக்கு உள்ளே மற்றும் இடையில் காணப்படும் கணிசமான வேறுபாடுகள் அந்த மக்களுக்கு கிடைக்கும் கண் பராமரிப்பு சேவை, அவர்களின் வாங்கும் திறன் மற்றும் கண் தொடர்பான விழிப்புணர்வைப் பொறுத்து அமைகின்றன. உதாரணமாக: குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கண் புரையால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டு விகிதம் வளர்ந்த நாடுகளைவிட அதிகமாக இருக்கிறது.
ஆனால் வளர்ந்த நாடுகளில், வயோதிகத்தால் ஏற்படும் விழிப்புள்ளிச் சிதைவு (macular Degeneration) மற்றும் கண் அழுத்த பாதிப்பே (glaucoma) பரவலாக காணப்படுகின்றன. அதுபோல் குழந்தைகளுக்கு இடையே மாறுபட்ட சிக்கல்கள் கணிசமாக நாடுகளுக்கு இடையே வேறுபடுகின்றன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் பிறவி கண்புரை (congenital cataract) என்பதே அதிகம் நிலவுகிறது. ஆனால் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், முதிர்ச்சி அடையாத விழித்திரைப் பிரச்சனைகளே (Retinopathy of prematurity) அதிகம் இருக்கும்.
அதுவே வளரிளம் பருவத்தினருக்கு மற்றும் குழந்தைகளுக்கு எல்லா நாடுகளிலும் சரிசெயாத ஒளிவிலகல் பிழை (uncorrected refractive error) என்கிற நோய்எ பார்வைக் குறைபாட்டுக்கு பிரதானமான காரணியாக இருக்கிறது.
பார்வைக் குறைபாட்டின் தாக்கம்
தனிப்பட்ட தாக்கம்:
ஆரம்பகால கடுமையான பார்வைக் குறைபாடுள்ள இளம் குழந்தைகள், தாமதமான உடல் இயக்கக் குறைபாடு, மொழி, உணர்ச்சி, சமூக மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி, ஆகியவற்றில் வாழ்நாள் முழுவதும் விளைவுகளை அனுபவிக்கக் கூடும்.
பார்வைக் குறைபாடுள்ள பள்ளி வயது குழந்தைகள் மிகச் சாதாரணமான கல்வி சாதனைகளை மட்டுமே வெளிக்கொணர முடியும்.
பார்வைக் குறைபாடு வயதுவந்த பருவத்தினரின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கிறது.
பார்வைக் குறைபாடுள்ள வளர் இளம் பருவத்தினர், பெரும்பாலும் குறைந்த செயல்திறன் பங்கேற்பு, உற்பத்தித்திறன் மற்றும் அதிக மனச்சோர்வு, கவலை ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்.
வயதேறிய வளர் பருவத்தினரைப் பொறுத்தவரை, பார்வைக் குறைபாடு சமூக தனிமைப்படுத்தல், நடப்பதில் இடர்பாடு, விழுதல் மற்றும் எலும்பு முறிவுகளின் அதிக ஆபத்து, மற்றும் முதியோர் அல்லது பராமரிப்பு இல்லங்களில் முன்கூட்டியே அனுமதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்கிற சாத்தியங்கள் இருக்கின்றன.
பொருளாதாரத் தாக்கம்:
பார்வைக் குறைபாடு உலகப் பொருளாதாரத்தில் நிதிச்சுமையை ஏற்படுத்துவதால், உலக அளவில் ஆண்டுதோறும் சராசரியாக ௪௧௧ பில்லியன் டாளர் அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. வாங்குவதில் உள்ள ஏற்றத்தாழ்வு (௩) பில்லியன். ஆனால் இதைக்காட்டிலும் பார்வைக் குறைபாட்டைக் கண்டறிந்து தடுக்கத் தேவைப்படுகிற நிதி ௨௫ பில்லியன் டாலர் என மதிப்பிடப்படுகிறது.
கண்ணின் தன்மைகளும் அதைப் பொறுத்து பார்வைக் குறைபாட்டை சரிசெய்யும் யுத்திகளும்:
அதிக எண்ணிக்கையிலான கண் நோய்களைத் தடுக்க முடியும். குறிப்பாக, (நோய்த்தொற்றுகள், அதிர்ச்சி, பாதுகாப்பற்ற பாரம்பரிய மருந்துகள், மகப்பேற்று நோய்கள் (perinatal diseases), ஊட்டச்சத்து தொடர்பான நோய்கள், பாதுகாப்பற்ற பயன்பாடு அல்லது மேற்பூச்சு சிகிச்சையின் (tropical treatment) சுய-நிர்வாகம் போன்றவை), ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமில்லை.
ஒவ்வொரு கண் நிலைக்கும் வெவ்வேறு சரியான சிகிச்சை உரிய நேரத்தில் தேவைப்படுகிறது. கண் நிலைமைகள் மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய தேவைகளை நிவர்த்தி செய்யும் ஊக்குவிப்பு, தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பயனளிக்கிற சிகிச்சைகள் உள்ளன. சுகாதாரப் பாதுகாப்பு உதவிகளில் சில மிகவும் செலவு குறைந்தவை மற்றும் செயல்படுத்தக்கூடியவை.
உதாரணமாக, கண்புரை அறுவைசிகிச்சை மூலம் பார்வையை மீட்டெடுக்கும் அதேசமயம், சரிசெய்யப்படாத ஒளிவிலகல் பிழையை (uncorrected refractive error) கண்ணாடிகள் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். வறண்ட கண், விழி வெண்படல அழற்சி (conjunctivitis) மற்றும் கண் இமை அழற்சி (blepharitis) போன்ற பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தாத பல கண் நிலைகளுக்கும் சிகிச்சை கிடைக்கிறது, ஆனால் அசௌகரியம் மற்றும் வலியை உருவாக்குகிறது. இந்த நிலைமைகளுக்கான சிகிச்சையானது அறிகுறிகளைக் குறைப்பதோடு மேலும் கடுமையான நோய்களை நோக்கிய படிநிலைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீரிழிவு விழித்திரை நோய் (diabetic retinopathy), கன்னழுத்த நோய் (glaucoma), அதிர்ச்சியின் விளைவுகள் மற்றும் வயது தொடர்பான விழிப்புள்ளிச் சிதைவு (macular degeneration) போன்ற கண் நிலைகளால் ஏற்படக்கூடிய மீளமுடியாத பார்வைக் குறைபாடு உள்ளவர்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் பார்வை மறுவாழ்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் எதிவினை:
உலக சுகாதார அமைப்பின் பணியானது பார்வை பற்றிய
WHO உலக அறிக்கையின் பரிந்துரைகள் (2019)
மற்றும் 2020 இல் 73ஆவது உலக சுகாதார மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, “ஒருங்கிணைந்த, மக்களை மையமாகக் கொண்ட கண் பராமரிப்பு, தடுக்கக்கூடிய பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாடு
உள்ளிட்ட” தீர்மானங்களால் வழிநடத்தப்படுகிறது.
அறிக்கை மற்றும் தீர்மானத்தின் முக்கிய முன்மொழிவு, ஒருங்கிணைந்த மக்களை மையமாகக் கொண்ட கண் சிகிச்சையை (IPEC) தேர்வுக்கான பராமரிப்பு மாதிரியாக மாற்றுவதும், அதன் பரவலான செயல்படுத்தலை உறுதி செய்வதும் ஆகும். பார்வை பற்றிய உலகளாவிய கருதுகோள்களைச் செப்பநிடுவதன் மூலம், உறுப்பு நாடுகள் மற்றும் அவர்களின் கூட்டு நாடுகளின் அறிக்கை மற்றும் தீர்மானங்களின் மூலம் கண் நிலைமைகள் மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவற்றின் சுமையைக் குறைப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs), குறிப்பாக SDG இலக்கு 3.8தனை உலகளாவிய சுகாதார காப்பிட்டின் துணையோடு அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்வையின்மையைத் தடுப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் சில முக்கிய பணிகள் மற்றும் செயல்பாடுகள்:
1. 2030 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மக்களை மையமாகக் கொண்ட, கண் பராமரிப்புக்கான உலகளாவிய இலக்குகளைக் கண்காணிக்க உறுப்பு நாடுகள் மற்றும் துறையில் உள்ள பிற கூட்டு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுதல்.
2. உலக பார்வை தினத்தை வருடாந்தர விழிப்புணர்வு நிகழ்வாக அனுசரித்து ஊக்குவித்தல்.
3. தொடர்ச்சியான தொழில்நுட்பக் கருவிகளைச் செயல்படுத்துவதன் மூலம் சுகாதார அமைப்புகளில் கண் பராமரிப்பு ஒருங்கிணைப்பை ஆதரித்தல்:
இதர முக்கிய செயல்பாடுகள்:
1. சுகாதார அமைப்புகளில் கண் பராமரிப்பு – பார்வை பற்றிய உலக அறிக்கையின் பரிந்துரைகளைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துவதில் உறுப்பு நாடுகளுக்கு நடைமுறை, படிப்படியான ஆதரவை வழங்கும் நடவடிக்கைக்கான வழிகாட்டுதல்.
2. கண் பராமரிப்பு தலையீடுகளின் தொகுப்பு (PECI): சுகாதார அமைப்பின் ஒவ்வொரு மட்டத்திலும் கண் பராமரிப்புக்கான திட்டமிடல் மற்றும் பட்ஜெட்டுக்கான ஒரு கருவி.
3. கண் பராமரிப்புத்திறன் கட்டமைப்பு (ECCF): திறன்களின் அடிப்படையில் கண் பராமரிப்பு மனித வளங்களுக்கான திட்டமிடல் கருவி; மற்றும்
4. கிட்டப்பார்வைக்கான மொபைல் health toolkit , மாற்றக்கூடிய ஆபத்து காரணிகள், கிட்டப்பார்வையின் சாத்தியமான மீளமுடியாத விளைவுகள் மற்றும் கண் கண்ணாடி இணக்கம் மற்றும் வழக்கமான கண் பரிசோதனைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுகாதாரக் கல்வியறிவை அதிகரிக்கச் செய்தல்.
கண் பராமரிப்பு சேவைகளை வழங்குவதை மதிப்பிடுவதற்கு நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கான மேம்பாடு மற்றும் செயல்படுத்தல் கருவிகள்:
1. கண் பராமரிப்பு சேவைகள் மதிப்பீட்டுக் கருவி
2. நீரிழிவு மற்றும் நீரிழிவு விழித்திரை நோய் (diabetic retinopathy) சேவைகளை மதிப்பிடுவதற்கான கருவி
3. கன்னழுத்த நோய் (glaucoma) சேவைகளை மதிப்பிடுவதற்கான கருவி
4. ஒளிவிலகல் சேவைகளின் மதிப்பீட்டிற்கான கருவி
5. மறுவாழ்வு சேவைகள் மற்றும் அமைப்புகளின் மதிப்பீட்டிற்கான கருவி.
அறிக்கையை ஆங்கிலத்தில் படிக்க:
***தொடர்புக்கு: mahendranbefrank@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
