அறிவிப்பு: ‘என்ன படிக்கலாம்?’ இணையவழி வழிகாட்டல் பயிலரங்கு: 2023-24

அறிவிப்பு: ‘என்ன படிக்கலாம்?’ இணையவழி வழிகாட்டல் பயிலரங்கு: 2023-24

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒருங்கிணைக்கும்,

‘என்ன படிக்கலாம்?’ பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் பயிலரங்கு:

ஏப்ரல் 14 முதல் ஏப்ரல்  19 வரை, ஆறு நாட்கள்…

தினமும் மாலை 7 மணிமுதல் 8 மணிவரை…

பல்வேறு துறைசார் பார்வை மாற்றுத்திறனாளி வல்லுநர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள்.

இடம்: ஆன்சலிவன் ஜூம் அரங்கம்,

Meeting இணைப்பு:

https://us06web.zoom.us/j/86154632187?pwd=TFhXUzZZeDNOVGxKNjdWcG9NMEJFZz09

Meeting குறியீடு: 861 5463 2187

கடவுக்குறியீடு: 1211

யூட்டூப் நேரலை:

https://www.youtube.com/@thodugai

அன்புள்ள பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களே!

மேல்நிலைக்கல்வியை முடித்து அடுத்து என்ன செய்யலாம் என சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் முன்னால் இருக்கும் இலக்குகள் ஆயிரம். அதற்கான பாதைகளோ பல்லாயிரம். எந்தப் பாதை உங்களுக்கானது? எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் இருக்கிறதா?

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் “என்ன படிக்கலாம்” இணையவழி வழிகாட்டல் நிகழ்வில் பங்கேற்று துறைசார் நிபுணர்களிடம் உங்கள் ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.

இந்தச் செய்தியை உங்கள் பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் பங்கேற்றுப் பயனடையச் செய்யுங்கள்.

இலக்கை நோக்கிய பயணத்தின் ஓர் இனிய தொடக்கம்…

வாருங்கள்! வளமான வருங்காலம் சமைக்க!

குறிப்பு: ஏப்ரல் 14 வெள்ளிக்கிழமை தொடங்கி,

ஏப்ரல் 19 புதன்கிழமை வரை;

 ஒருநாளைக்கு ஒரு துறை என திட்டமிடப்பட்டுள்ள அமர்வுகளின் விவரம், நிபுணர்கள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் தொடுகை இணையதளத்தின் வாயிலாகத் தொடர்ந்து செய்திகளாக வெளியிடப்படும்.

ஊடகத் தோழமை: தொடுகை மின்னிதழ்:

பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம்:

உரையாடலும், உரையாடல் நிமித்தமும்!

https://thodugai.in

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *