வயலில் ஒருத்தி அவளைப் பாருங்கள்.
அந்த தனித்த மேட்டு நிலத்து தேவதை.
அறுவடை செய்வதும் பாடுவதும் அவளே.
இங்கேயே உறைந்துவிடுங்கள் அல்லது ஊர்ந்தாவது செல்லுங்கள்.
ஒருத்தியாக வெட்டியும் கட்டியும் கொண்டிருக்கிறாள் நெற்கதிர்களை.
அதனுடன் ஒரு சோகப்பண் பாடுகிறாள்.
ஐயோ கிடங்கினுள் ஆழ்ந்து இருப்பதை கேளுங்கள்,
அது ஓசையினால் பெருக்கெடுத்துக்கொண்டிருக்கிறதே!
எந்தக் குயிலும் இதுவரை இசைத்தது இல்லை,
களைத்த கூட்டம் அதிகம் விரும்பி களிக்கும் ஒன்றை.
சில நிழல் தரும் இடங்களை எட்டிவிடத் தவிக்கிற பயணிகள்,
அந்த அரேபியப் பாலைவனத்திற்கு மத்தியிலே!
அப்படி ஒரு குதூகலிக்கும் குரலை அதற்கு முன் கேட்டதில்லை,
வசந்தகால குயிலிஇடமிருந்தும் வந்ததில்லை!
சமுத்திரத்தின் நிசப்தத்தை உடைத்துக்கொண்டு,
தொலைதூரத்துப் பயணங்களுக்கு மத்தியில்!
எவற்றைப் பாடுகிறாள் என்று யாரேனும் சொல்வீரோ?
ஒருவேளை துயர் சொட்டும் இசைப் பொழிவோ?
பழைய, வருந்தத்தக்க, நெருங்கிட இயலாதவைகளோ?
முன்னொரு காலத்துப் போர்களைப் பற்றியோ?
ஒருவேளை பண்பான எளிய இசையோ?
பழக்கப்பட்ட சமகால சம்பவங்களோ?
சில இயற்கையான துக்கம், இறப்பு, வலிகளோ?
அவை இருந்துகொண்டே இருப்பவையோ,
மேலும் மீண்டும் நடக்க இருப்பவையோ?
கன்னிகை பாடிய கருப்பொருள் எதுவாகினும்,
முடிவு அற்றதாய் அவளின் பாடல் ஒலிக்கிறதே!
அவள் வேலை செய்தபடி பாமாலை பாடுவதைப் பார்த்தேன்,
அரிவாளோடு குனிந்திருந்தபடி.
இயக்கமும் அசைவும் அற்றபடி நான் கேட்டேன்,
குன்றின்மீது ஏறியபடி.
என் இதயம் முழுமையும் நிறைந்த அந்த இசை,
நாட்கள் உருண்டோடியும் அவ்வாறே ஒன்றையும் கேட்க முடியவில்லை!
***தொடர்புக்கு: mahendranlitmcc@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
