Categories
தொடுகை மின்னிதழ் முந்தைய இதழ்கள்

தொடுகை: இதழ் (3) மார்ச், 2023

இதழைப் படித்துவிட்டுத் தங்கள் மேலான கருத்துகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

வணக்கம் தொடுகை ஸ்பரிசகர்களே!

தாமதமான மகளிர் தின வாழ்த்துக்களுடன், மகளிர் சார்ந்த படைப்புகளைத் தாங்கி,, இதோ,விரிகிறது மார்ச் மாத தொடுகை இதழ்.

 விழிச்சவால் மகளிரான திருமதி. கௌரி, திருமதி. தாஹிரா போன்ற பிரபல எழுத்தாளர்கள் மற்றும் திருமதி. விஜயலட்சுமி, திருமதி. செந்தமிழ்ச்செல்வி, செல்வி. கீதா, திருமதி. ஜோதி வெங்கடேசன், திருமதி. ராமலக்ஷ்மி போன்ற அறிமுக எழுத்தாளர்கள் உரமூட்ட, விளம்பரத்தை விரும்பாத சாதனைப் பெண்மணி அருணாதேவி அவர்கள் நீர்வார்க்க, பெண்ணியம் போற்றும் திரு. சிதம்பரம் ரவிச்சந்திரன், திரு.  மகேந்திரன் போன்றோர் வலுவூட்ட, வழக்கமான தொடர்களைத் தவிர்த்து மகளிர் தொடர்பான ஆக்கங்களை உள்ளடக்கிய சிறப்பிதழாக வடிவமைக்க, சித்ரா, செலின் இணைந்து உதிர்த்த விதை பெருமுயற்சிக்குப்பின் புதிய விடியல் கண்டிருக்கிறது.

வாருங்கள் அன்பர்களே, இதழ் பங்கேற்பாளர்களை வாழ்த்தியபடி, விரிந்திருக்கும் இதழில் பொதிந்திருக்கும் தேனைப் பருகி அறிவுப் பசியாற அன்புடன் அழைக்கிறது மார்ச் மாத தொடுகை மின்னிதழ் மகளிர்தின சிறப்பிதழாக.

    இதழ் ஒருங்கிணைப்பு: திருமதி. செலின்மேரி மற்றும்

    செல்வி. சித்ரா.

    வடிவமைப்பு: ப. சரவணமணிகண்டன்.

    மெய்ப்பு நோக்கியவர்கள்: திருமதி. கண்மணி,

    திருமதி. வளர்மதி,

    செல்வி. வெரோனிக்கா மோனிஷா மற்றும் திருமதி. தங்கலட்சுமி.


    Discover more from தொடுகை

    Subscribe to get the latest posts sent to your email.

    உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.