பெண்ணின் பெருந்தக்க யாவுள
அன்புடையாள் என்பார்கள்; – ஆனால்
அடிமை செய்து பார்ப்பார்கள்.
அமைதியும் பேரழகும்
கொண்டவள் என்பார்கள்;
அடுத்த கணமே,
அமங்கலவதி என்று
அவையில் தள்ளி வைப்பார்கள்.
இரக்கம், ஈகைக்
குணம் பெற்றவள் என்பார்கள்;
நாட்கள் கடந்ததும்
ஈனப்பிறவி என்பார்கள்.
உண்மையும் ஊக்கமும்
உறுதியும் உடையவள் என்பார்கள்; – ஆனால்
உருகுவதுபோல் நடித்து
வஞ்சனை செய்து
வேடிக்கை பார்ப்பார்கள்.
பெண்ணின் சேவை
தேவை என்பார்கள்; – பிறகு
மோகம் தீர்ந்த பின்பு
மேகத்தில் பறப்பார்கள்.
பெண் பாலினத்தை பாழாக்கி
பாதாளத்தில் அமிழ்த்துவார்கள்; – மறுபக்கம்
பட்டியல் நீளத்தின்
பக்கமோ முடிவிராது.
ஆணினமே!
உனக்கு ஒரு வேண்டுகோள்!
எங்களின் உணர்வை மதி!
அதுவே உன் மனதுக்கு நீதி!
மங்கை இனி எப்போதும்
ஓயாது ஓடிக்கொண்டிருக்கும்
புனித கங்கை;
வாழ்வில் நீர் அல்லவோ வேங்கை.
லட்சங்களில் ஒருத்தியாய்
இருந்து விடாதே! – உன்
இலட்சியத்தில் முனைப்பாய் இரு;
சாதிக்கு பிறந்தவள் அல்ல
சாதிக்கப் பிறந்தவள் நீ!
நம் அடையாளச் சின்னம்
வானளவும் உயரட்டும்!
வாழ்க பெண்மை !
***தொடர்புக்கு: teporalakshmi@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
