Categories
அண்மைப்பதிவுகள் கல்வி தொடர்பான அரசாணைகள் தொடுகை மின்னிதழ்

தரம் உயர்வு பெற்றன செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளிகள்: வெளியானது அரசின் ஆணை

தமிழக அரசுக்கு நன்றி

ஈரோடு பள்ளியின் முகப்புப்படம்

“ஈரோடு அரசு சிறப்புப் பள்ளியைத் தரம் உயர்த்துங்கள்.” தமிழ்நாடு முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

“தமிழக அரசுக்கு நன்றி!” ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

சரித்திர சாதனை

2022 – 2023 நிதி ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் 21.4.2022 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் மூன்று பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாகவும், ஈரோடு மற்றும் விருதுநகரில் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதற்கான உரிய அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையின்படி, மேல்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் ஈரோடு மற்றும் விருதுநகர் பள்ளிகளில், தலா மூன்று முதுகலை ஆசிரியர்ப் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்வு பெறும் புதுக்கோட்டை பள்ளிக்கு புதிதாக ஆசிரியர்ப் பணியிடங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. தலைமை ஆசிரியர்ப் பணியிடம் மட்டும் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

அரசாணையைப் பதிவிறக்க:


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.