உலகம்: வியப்பூட்டும் விந்தை செய்திகள்

உலகம்: வியப்பூட்டும் விந்தை செய்திகள்

ஆக்கம் சிதம்பரம் இரவிச்சந்திரன் வெளியிடப்பட்டது

*யார் கண்டது அதிஷ்டம் எப்படி வருமென்று!*

அருங்காட்சியகம்
சித்தரிப்புப்படம்

வியப்பூட்டும் காட்சிகளை காண, வரலாற்றைப் பற்றிய அறிவைப் பெற, சுவாரசியமான மற்ற செய்திகளைத் தெரிந்துகொள்ளவே எல்லோரும் அருங்காட்சியகங்களுக்கு செல்வது வழக்கம்.  கனடாவில் ஸ்டீபன்மில்ஸ் என்பவர் குடும்பத்துடன் தி வெர்மிலியன் அருங்காட்சியகத்தைப் பார்க்கப்போனார். ஆனால் அங்கே ஸ்டீபனுக்காக ஒரு அதிர்ஷ்டம் காத்திருந்தது.  அது அவரை புகழின் உச்சாணிக்கொம்பில் கொண்டு போய் நிறுத்தும் என்று யாரும் கற்பனைகூட செய்யவில்லை.  அது என்ன என்கிறீர்களா? ஒரு பெட்டியும் பூட்டும்தான். அந்தப் பெட்டியைப் பூட்டியிருந்த பூட்டைத் திறந்து புகழடைந்தார் அவர். 1907ல் பிரின்ஸ்விக் ஹோட்டலில் இருந்த ஒரு பெரிய உலோகப்பெட் செய்துவந்தனர் என்று அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அனைவரும் தோல்வியையே தழுவினர்.

அருங்காட்சியகம் பார்க்க வந்த ஸ்டீபனுக்குக் கிடைத்தது இந்தப் பெட்டியைத் திறக்க ஒரு அரியவாய்ப்பு. பெட்டிக்கு முன்னால் போய்நின்றதும் ஸ்டீபனின் மனதில் பட்டென்று ஒரு நம்பர் தோன்றி மறைந்தது.  204060.  இதுதான் அந்த நம்பர். சிறிதும் தாமதிக்காமல் நம்பர்களைக் கொண்டு பூட்டைத் திறக்கத் தொடங்கினார் அவர். எல்லோரும் மூக்கில் விரலை வைக்கும்படி சட்டென்று பெட்டி திறந்தது! வருடக்கணக்காக மூடிக்கிடந்த பலரும், திறக்க முயன்று தோல்வி கண்ட பெட்டியைதான் முதல் முயற்சியிலேயே ஸ்டீபன் திறந்து சாதனை படைத்தார்.

இவ்வளவு காலம் மூடி வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் என்னதான் இருந்தது என்கிறீர்களா நீங்கள்?  1920களில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் ஒரு ஆர்டர் பேட் (order pad) மற்றும் பழைய பே ஷீட் (pay sheet) ஆகியவையே அதில் இருந்தன. இதில் இருந்து அன்று ஒரு காளான் பர்கருடைய விலை 1.5 டாலர் என்றும், ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை 1 டாலர் என்றும் தெரியவந்தது. இவ்வளவுகாலமும் திறக்கமுடியாமல் இருந்த பெட்டியை ஒரே முயற்சியில் திறப்பதற்கான சாத்தியக்கூறு 2,16,000 பெயரில் ஒருவருக்கு மட்டும்தான் அமையும் என்று டொரான்ட்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஜெஃப்ரி நோஸ்வெல் என்ற ஆய்வாளர் கூறுகிறார். ஆனால் ஸ்டீபன்மில்ஸ் சொன்னது ஒன்றே ஒன்றுதான். “ அது ஒரு திகில் நிறைந்த அனுபவம்” என்பதே அது”.

*இப்படியும் ஒரு போட்டி!*

ஆண்ட்டிக் போன்
சித்தரிப்புப்படம்

“ஸ்மார்ட் போன் இல்லாத ஒரு வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? இன்டர்நெட் இல்லை..  கூகுல் மேப் இல்லை..  கேமரா கிடையாது..  இது எல்லாம் இல்லாமல் நம்மால் வாழமுடியுமா? அமெரிக்காவில் இன்டர்நெட்டையும், போனையும், கேபிளையும் விற்கின்ற ஒரு கம்பெனி ப்ளிக் போன் சேலஞ்ஜ் என்ற பெயரில் ஒரு போட்டியை அறிவித்தது.      “ 2019ல் இருந்து 90களை நோக்கி” என்பதுதான் இந்தப் போட்டிக்கான முத்திரை வாக்கியம்.  இங்கு 90கள் என்பது அமெரிக்காவில் 90களின் காலகட்டம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  இந்தியாவில் இதற்கும் அப்புறம் ஒன்றிரண்டு பத்தாண்டுகள் கழித்தே ஸ்மார்ட் போன்கள் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டன. பழையரீதியில் இருக்கும் ஒரு ப்ளிக் போனோடு ஒரு வாரகாலம் வாழும்போது அந்நிலையில் நுகர்பவரின் உறக்கரீதி, உற்பத்தித்திறன், நேரம் தவறாமை போன்ற விஷயங்களில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று கம்பெனி ஆராய்ந்தது.

ஸ்மார்ட் போன் இல்லாமல் போட்டியில் பங்கேற்பவர்கள் ஒரு வாரகாலம் அடக்க ஒடுக்கத்துடன் இருக்கவேண்டும்.  ஸ்மார்ட் போன் இல்லாமல் இப்போது இருப்பதைப் போலவும் வாழ்ந்து காட்டவேண்டும்.  முதல்முதலாக ப்ளிக் போன் வெளிவந்து முப்பது ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையிலேயே கம்பெனி இப்படிப்பட்ட ஒரு போட்டியை நடத்துவதாக அறிவிப்பு செய்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவருக்குப் பரிசாக ஆயிரம் டாலர்கள் கிடைக்கும். மேலும், “வாழ அவசியமான பொருட்கள் அடங்கிய பேழை” (survival kit) பரிசாகக் கிடைக்கும். இதில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு இருந்த காலத்தில் நாம் பயன்படுத்தி வந்த ஆனால் இப்போது மறந்துபோய்விட்ட சில பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பாக்கெட் நோட்டுப்புத்தகம், ஜி பி எஸ் இதற்குப் பதில் வரைபடம், ஒரு பேனா மற்றும் ஒரு நோட்டுப்புத்தகம் ஆகியவை மட்டுமே இதில் இருக்கின்றன. வெற்றி பெறுபவர் ஏராளமான பாட்டுகளையும் கேட்கலாம்.  ஆனால், அது ஸ்மார்ட் போனில் இல்லை.  90களில் வெளிவந்த பாடல்கள் அடங்கிய சில குறுந்தகடுகளும் சேர்ந்து இந்தப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. ஆஹா! செய்தியைக் கேட்டவுடனே நீங்கள் போட்டிக்குக் கிளம்பிவிட்டீர்களா? வெற்றியுடன் திரும்பிவாருங்கள். வாழ்த்துகள்.”.

தொடர்புக்கு: nrvikram19@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *