தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் ராஜேஷ்வரி மறைந்தார்

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் ராஜேஷ்வரி மறைந்தார்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ராஜேஸ்வரி
பிறப்பு: 10.10.1970
மறைவு: 02.12.2022

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் (TAB) துணைத்தலைவரும், சென்னை, காய்தே மில்லத் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றிய செல்வி. ராஜேஸ்வரி (52) அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக இன்று காலைஇயற்கை எய்தினார்.

தொடக்கத்தில் பார்வையற்ற மகளிர் சங்கத்தி்ல் (Blind Women Association) பல பொறுப்புகளை வகித்த இவர், அகில இந்தியப் பார்வையற்றோர் சம்மேளனத்தின் (AICFB)சார்பில் தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தில் பணியமர்த்தல் அலுவலராக (Placement Officer) நியமிக்கப்பட்டார்.

டீஏபி லோகோ

கடந்த மே 2006 முதல் தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவராகச் செயல்படத் தொடங்கினார். கல்லூரி செல்லும் பார்வையற்ற பெண்களுக்கான விடுதி, தையல் பயிற்சி, கணினிப்பயிற்சி என  தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் மூலம், பார்வையற்ற மகளிரின் கல்வி, பணிவாய்ப்புகள் தொடர்பான பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளைச் செயல்படுத்தியவர்.

தனது ஆயுளின் பெரும்பகுதியைப் பார்வையற்ற சமூகத்தின் வளர்ச்சிக்காய் அர்ப்பணித்தவர். பார்வையற்ற மகளிரின் சமூக மேம்பாட்டை ஒற்றை நோக்கமாகக்கொண்டு சமூகம் சார்ந்து களமாடிய விரல்விட்டு எண்ணக்கூடிய பார்வயற்ற பெண்களுள் அன்னாருக்கு சிறப்பான இடம் உண்டு.

செல்வி. ராஜேஸ்வரி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு சவால்முரசு தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

அன்னாரின் இறுதி நிகழ்வு இன்று பிற்பகல் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

30/680

அயோத்தியா நகர்,

திருவல்லிக்கேணி,

சென்னை 5

தொடர்பு எண்கள்: 9444445660

8668190708

9884490308

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *