அறிமுகம்
எனது நண்பனை
உங்களிடத்தில்
நான் அறிமுகம் செய்துவைப்பதற்கு
அவனது பெயர்,
அவனது ஊர்,
அவனது படிப்பு,
அவன் ஒரு நாடகக் கலைஞன்,
அருமையான பாடகன்,
நல்ல கவிஞன்,
சிறந்த ஊக்குவிப்பாளன்
என்பதையெல்லாம் கடந்து
எனது நண்பனை
உங்களிடத்தில்
நான் அறிமுகம் செய்துவைப்பதற்கு
அவன் பார்வையற்றவன் என்பதே;
உங்களுக்குப் போதுமாய் இருக்கின்றது!
***
நாட்களின் முடிவில்
உங்களுக்குக் கண்ணு தெரியாதா?
எப்படிப் படிக்கிறிங்க?
என்ன வேல பாக்குறிங்க?
கல்யாணம் ஆயிடுச்சா?
இப்படி எத்தனை யெத்தனை கேள்விகள் இருக்கின்றன
நாட்களின் முடிவில்
கேள்விகளுக்குத் தப்பிச்செல்ல நினைத்து
கேள்விகளுக்குள்ளே மறைந்துகொள்கின்றேன்
எங்கும் கேள்வி மயம்
இன்றைக்கு நான்
நாளைக்கு உங்களில் யார்வேண்டுமானாலும்!
***ஜிகுனா சுந்தர்
முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை
P.S.G. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்.
தொடர்புக்கு: 8098386884
Msmvj5@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

6 replies on “இரண்டு கவிதைகள்: ஜிகுனா சுந்தர்”
நெற்றிப் பொட்டில் அறைந்தது கவிதை..
LikeLike
எங்கள் சிந்தனைகளில் இருந்து நீக்கமுடியாத கேள்விகள். வருந்துகிறேன்!!
LikeLike
அருமை
LikeLike
Super
LikeLike
Heart touching 👏🏼👏🏼👏🏼
LikeLike
அருமை டா மச்சா
LikeLike