மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 21.03.2022 சிறப்பு செய்திக்கொத்து

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 21.03.2022 சிறப்பு செய்திக்கொத்து

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

ரயிலிலிருந்து இறக்கி விடப்பட்ட மாற்றுத்திறனாளிகள் – கோட்டையில் போராட கிளம்பியவர்கள் சேலத்தில் தடுத்து நிறுத்தம்

Salem : தற்போது ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசு கண்டு கொள்ளவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

tamil.news18.com

மாத உதவித்தொகை உயர்த்தக்கோரி போராட்டம் நடத்த முயன்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது | Dinakaran

m.dinakaran.com

இரண்டே மணி நேரத்தில் பேச்சுவார்த்தை… போராட்டத்தைக் கைவிட்ட மாற்றுத்திறனாளிகள்!

    மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.   தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை 1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும், கடுமையான மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பேருந்துகள், ரயில்கள் மூலம் சென்னை வந்த மாற்றுத்திறனாளிகள் சென்னை சேப்பாக்கம் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அப்பொழுது போலீசாருக்கும் போராட வந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இரண்டே மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரை தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. உதவித்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.    

www.nakkheeran.in

சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்

சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

www.dailythanthi.com

உதவித் தொகையை உயர்த்துவதாக தமிழக அரசு உறுதி: மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்

உதவித் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்ததை அடுத்து, சென்னையில் நடந்து வந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

www.hindutamil.in

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *