ஒரு போராட்ட அறிவிப்பும், பெற்றிருக்கிற வெற்றியும்

ஒரு போராட்ட அறிவிப்பும், பெற்றிருக்கிற வெற்றியும்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

தமிழ்நாடு காதுகேளாதோர்
கூட்டமைப்பு
காத்திருப்பு போராட்டம்
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , ஈரோடு .
தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் சார்பில்
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் முன் காலை 9.30 மணி , 08.02.2022 - ல்
காத்திருப்பு போராட்டம்
1 ) அரசு வேலை வாய்ப்பில் 1 % இட ஒதுக்கீடு படி அரசு வேலை
வழங்குக
2 ) உயர்நீதிமன்றம் உத்தரவு படி ஓட்டுனர் உரிமம் வழங்க
விரைந்து முகாம் நடத்துக
3 ) சைகை மொழியை விரைந்து அமல் படுத்துக
4 ) மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சைகை மொழி
பெயர்ப்பாளர் விரைந்து நியமனம் செய்க
5 ) மாதாந்திர உதவித்தொகை ரூ .3000 ஆக உயர்த்தி வழங்குக
6 ) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள காதுகேளாதோருக்கு
தொகுப்பு வீடுகள் வழங்குக
7 ) அனைத்து பள்ளி , கல்லூரி , அரசு துறை அலுவலகங்களில்
சைகை மொழியை அமுல்படுத்தி அரசாணை வெளியிடுக
8 ) வங்கிக்கடன் பெற நிபந்தனையை நீக்குக
தமிழக அரசே ! மாவட்ட நிர்வாகமே !!
எங்களை அலைகழிக்காதே !!!
இப்படிக்கு
ஈரோடு மாவட்ட செவித்திறன்
குறையுடையோருக்கான நலச்சங்கம் ,

கூட்டமைப்பின் போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து கடந்த 02.02.2022 அன்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கூட்டமைப்பு நிர்வாகிளகை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு கோரிக்கை பற்றியும் அதன்மீது தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள்ள் நல செயலருக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில்,

ஒரு போராட்ட அறிவிப்பும், பெற்றிருக்கிற வெற்றியும்

“செவித்திறன் குறையுடையோர் நலனுக்கான 8 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மேற்காணும் சங்கத்தினர் அனைத்து மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக தெரிவித்ததை தொடர்ந்து 02.02.2022 அன்று மாலை 3.00 மணி அளவில் இயக்குநர் அவர்களின் ஆணையின்படி நடந்த பேச்சுவார்த்தையில் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி சங்கப்பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது, அதன் விவரம்

கோரிக்கை எண்.1

அரசு மற்றும் அரசு சார்ந்த துறை நிறுவனங்களில் 1% காது கேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்திர வேலைவாய்ப்பு வழங்கிடவும்.

நடவடிக்கை விவரம்.

அரசு மற்றும் அரசு சார்ந்த துறை நிறுவனங்களில் 1% காது கேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்திர வேலை வாய்ப்பு வழங்க ஏதுவாக கீழ்காணும் அரசாணையின்படி உகந்த பணியிடங்கள் என 559 பணியிடங்கள் பிரிவு A மற்றும் B பிரிவுகளில் கண்டறியப்பட்டு அனைத்து அரசு துறைகளிலும் 4% வழங்கப்பட்டுவருகிறது. ஒதுக்கீட்டு அடிப்படையில் 1. 235 post has been identified under G.O.Ms.No.20, WDAP (DAP.3.2) Dept, Dt: 20.06.2018 2. 3 post has been identified under G.O.Ms.No.23, WDAP (DAP – 3.2) Dept, Dt: 20.07.2018 3. 12+6_post has been identified under G.O.Ms.No.09, WDAP (DAP – 3.2) Dept, Dt: 15.07.2020 4. 279+18 post has been identified under G.O.Ms.No.08, WDAP (DAP – 3.2) Dept, Dt: 15 07 2020 5. 6 post has been identified under G.O.Ms.No.06, WDAP (DAP – 3.2) Dept, Dt: 21.10.2019

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு குழுமத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மையங்கள் மாவட்டந்தோறும் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 ல் வலியுறுத்தப்பட்ட (Equal opportunity policy) சம வாய்ப்பு கொள்கை அனைத்து அரசு, மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் தடையற்ற சூழல் அமைத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோரிக்கை எண்.2

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு செலவில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரவும்,

நடவடிக்கை விவரம்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு செலவில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டி உரிய நடவடிக்கை மேற்கொள்ள, 5 சதவிகித ஒதுக்கீட்டின்படி முன்னுரிமை வழங்க ஊரக வளர்ச்சித் துறை (Rural Development) மற்றும் நகர்புற வளர்ச்சி கழகத்திற்கு கடிதம் வரையப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாக மூலமும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட வளர்ச்சி முகமை மூலமும் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோரிக்கை எண் 3|

காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பல மாதங்கள் ஆகியும் இன்னும் முகாம் நடத்தப்படவில்லை ஆகவே முகாம் நடத்தி ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும்.

நடவடிக்கை விவரம்.

காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்த , மாநில ஆணையர்மூலம் போக்குவரத்து துறைக்கு நீதிமன்ற வழக்காக விசாரணை மேற்கொண்டு இதன் அடிப்படையில் போக்குவரத்து ஆணையர் மூலம் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மீது தற்போது இத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோரிக்கை எண்.4:

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அனுபவம் வாய்ந்த சைகை மொழிபெயர்ப்பாளர்கள் அரசு செலவில் நியமிக்க வேண்டும்.

நடவடிக்கை விவரம்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்க உரிய கருத்துரு அனுப்பப்படும். தற்போது மாவட்டங்களில் செவித்திறன் குறையுடையோரிடம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள, அனைத்து மாவட்டங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் அடங்கிய குழுவினை தெரிவு செய்து அவ்வப்போது மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும், குறைதீர்க்கும் முகாம்கள், வழக்குகள் ஆய்வுக் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு இப்பணியாளர்களின் சேவையை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோரிக்கை எண்.5:

விலைவாசி உயர்வு காரணமாக தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை ரூ.1000/ – இருந்து ரூ.3000/ – ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

நடவடிக்கை விவரம்.

விலைவாசி உயர்வு காரணமாக தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை ரூ.1000/ – இருந்து ரூ.3000/ – ஆக உயர்த்தி வழங்க வேண்டிய கோரிக்கை நடவடிக்கைக்காக அரசுக்கு ஏற்கனவே கருத்துரு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உதவிபெறும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.1500/ – இருந்து ரூ.2000/ – ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வருவாய்த் துறையின் மூலம் ரூ.1000/ – மாத உதவித் தொகை பெறும் செவித்திறன் பாதிப்படைந்தோர் உட்பட இதர மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தும் நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கோரிக்கை எண். 6:

நிபந்தனைகள் அற்ற வங்கிக்கடன் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

நடவடிக்கை விவரம்.

நிபந்தனைகள் அற்ற வங்கிக்கடன் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் நடவடிக்கை, வங்கி நிறுவனங்கள் மூலம் பரிசீலனை செய்யப்பட வேண்டும். தற்போது சிறு தொழில் கடனுதவி ரூ.25,000/ – முதல் ரூ.5,00,000/ – வரை வங்கிகள் மூலம் பல்வேறு திட்டங்கள் மூலம் (சிறுதொழில், வியாபாரம் துவங்கவும், பாரதப் பிரமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் (UYEGP) 5% மானியம் வழங்கியும், (NHFDC) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிதி மேம்பாட்டு குழுமத்தின் மூலம் வட்டியில்லா கடனுதவி (உரிய சமயத்தில் கடன் தொகையை திருப்பி செலுத்தும் நிகழ்வில்) வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் மூலம் ரூ.25,000/ – மானியமும், ஆவின் பாலகம் அமைக்க ரூ.50,000/ – வரை காப்புறுதிக்கான நிதி (Security Deposit) வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகை மாற்றுத்திறனாளிகள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப தொழிலினை தெரிவு செய்ய EDI நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏதுவான சிறுதொழில் தொடங்க பயனாளிகளுக்கு உதவப்படுகிறது.

கோரிக்கை எண். 7:

அனைத்து பள்ளி கல்லூரி மற்றும் அரசுத் துறை அலுவலகங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

நடவடிக்கை விவரம்.

அனைத்து பள்ளி கல்லூரி மற்றும் அரசுத் துறை அலுவலகங்களில் சைகை மொழியை அமல்படுத்த உரிய பயிற்சி வழங்க ஏதுவாக முதற்கட்டமாக, சைகை மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சி வழங்க நிறுவனங்களுக்கு (ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர்) நிதியுதவி வழங்கி பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. இதன் முதல்கட்டமாக, கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக இதர இடங்களுக்கு தடையற்ற சூழல் அமைக்கும் நிகழ்வாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோரிக்கை என். 8:

தமிழக அரசு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் மூலம் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொள்ள தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் சார்பில் 2 பிரதிநிதிகள் கலந்துகொள்ள அழைப்பு விடுவிக்க வேண்டும்.

நடவடிக்கை விவரம்.

தமிழக அரசு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் மூலம் நடத்தப்படும் அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொள்ள தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வைப்பதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்படும், மாவட்ட அளவிலும் செவித்திறன் பாதிப்படைதோருக்கான சங்க பிரதிநிதிகள் மாவட்ட குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுக்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறைகளுக்கு உரிய தீர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.” என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தைப் பதிவிறக்க:

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 8ஆம் தேதி நடைபெறவிருந்த காத்திருப்பு போராட்டத்தினை தற்காளிகமாக ஒத்திவைப்பதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

போராடுவோம் !
 வெற்றி பெறுவோம் !! தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு
48 , சாந்தோம் நெடுஞ்சாலை , சென்னை -28 காத்திருப்பு போராட்டம்
ஒத்திவைப்பு தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் 8 அம்ச கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து மாநில ஆணையர்
அவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளை அழைத்து 02/02/2022 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில்
சந்தித்து பெருந்தன்மையோடு நமது கோரிக்கைகள் குறித்த விபரங்கள் கேட்டறிந்தும் , பரிசீலனையில் உள்ள
கோரிக்கைகள் பற்றி விளக்கமளித்தும் மற்றும் தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி வாங்கித்
தருவதாகவும் உறுதியளித்த மாநில ஆணையருக்கும் மற்றும்
தமிழக அரசுக்கும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . பிப்ரவரி 8 ல் நடைபெற இருந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது .
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள போராட்டக் குழுவினர் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு

செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளின் போராட்ட அறிவிப்பும், பெற்றிருக்கிற வெற்றியும் மகிழ்ச்சியைத் தருகிறது. உரிய நியாயங்கள் இருந்தும்கூட அவர்களின் பல கோரிக்கைகள் பல ஆண்டுகாலமாகப் புறந்தள்ளப்பட்டேவந்துள்ளன. உதாரணமாக, ஊர்திப்படி பெறும் வாய்ப்பையே அவர்கள் கடந்த 2017 ஆண்டில்தான் பெற்றார்கள். இதர மாற்றுத்திறனாளிகளுக்கு இது கடந்த 1989 முதலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இழைக்கப்படும் அநீதி அனைவருக்கும் பொதுவானதாகவே நிகழ்ந்தேறும் என்றாலும், சிறப்புப்பள்ளிகளிலுல்கூட பெரும்பாலான போராட்டங்கள் பார்வையற்ற மாணவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் அவர்களுக்கான சில கோரிக்கைகளை நாங்கள் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

செவித்திறன் குறையுடைய அரசு சிறப்புப் பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடங்களை செவித்திறன் குறையுடையோருக்காக ஒதுக்க வேண்டும். மேலும், ஆயா, இரவுக்காவலர், சமையலர் போன்ற செவித்திறன் குறையுடைய அரசு சிறப்புப் பள்ளிகளில் உள்ள  விடுதிப்பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பவை அவற்றில் முக்கியமானவை.

இப்போது அவர்களுக்கான குரலாய் அவர்களே மாறியிருக்கிறார்கள் என்பதால், இனி இலக்குகள் துல்லியமாக வகுக்கப்பட்டு, விரைவான வெற்றி சாத்தியம் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பிற்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பிலும் வாழ்த்துகள்.

***ப. சரவணமணிகண்டன்

இணைச்செயலர்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *