கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர
பிரெயில் தினத்தை முன்னிட்டு காலையில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பிரெயில் வாசித்தல், ஆங்கில பிரெயில் வாசித்தல், ஆங்கில சுருக்கெழுத்து வினாடிவினா மற்றும் பாசிங் தி பால் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
பிற்பகலில் லூயி பிரெயில் அவர்களின் படத்திற்கு பள்ளியின் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த, பரிசளிப்பு நிகழ்வு தொடங்கியது.
நிகழ்வை முதுகலை ஆசிரியர் திரு. மோகன் அவர்கள் தொகுத்து வழங்க, முதுகலை ஆசிரியர் திரு. கோவிந்தராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தனது 30களில் பார்வையை இழந்தபோதும், தன்னம்பிக்கையுடன் பிரெயில் கற்றுக்கொண்டு, இன்று பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும் திருமதி. கலைச்செல்வி அவர்கள் பிரெயிலின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
30 வயதுக்கு மேல் தான் பிரெயில் கற்றுக்கொண்டதைப் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்ட பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் செல்வி. சித்ரா, போட்டிகளில் மாணவர்கள் தடம் பதித்த இடங்களையும், தடுமாறிய கணங்களையும் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
லூயி பிரெயில் அவர்களின் வரலாறு, பிரெயிலின் இன்றைய நிலை, பிரெயிலின் பயன்பாட்டை அதிகரிக்க நாம் செய்ய வேண்டியவை குறித்து தனது உரையில் வலியுறுத்தினார் 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவன் செல்வன் ஐயப்பன்.
இறுதியாக, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல்வர் அவர்கள் பரிசுகள் வழங்க, பிரெயில்தினக் கொண்டாட்டம் இனிதே நிறைவுபெற்றது.
படங்கள் உதவி:
ஆசிரியர்கள் திரு. டேவிட் ராஜாசிங், திருமதி. மேரி பாத்திமா விஜையா, திருமதி. பிரியா சந்திரசேகரன், திரு. திருமுருகன் மற்றும்
செல்வி. தீபிகா, செல்வி. சாருப்பிரியா, செல்வி. கீர்த்தனா.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.











