Categories
இலக்கியம் கலை காணொளிகள் சிறப்புப் பள்ளிகள்

குழந்தைகள் நாளில் குழந்தையாக

குழந்தைகள் நாளில் குழந்தையாக

புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளியில் நான் பணியாற்றிய ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் கலைநிகழ்ச்சிகள் செய்வது, ஜவகர்லால் நேரு பற்றி மாணவர்களிடம் எடுத்துரைப்பது என நவம்பர் 14 குழந்தைகள் நாள் வழக்கங்கள் அனுஷ்டானங்களாகவே மாறிவிட்டிருந்தன.

கடந்த 2017 ஆம் ஆண்டில் ஏதேனும் வித்யாசமாக செய்து பார்க்கலாம் என்று யோசித்தேன். அவை நான் அறவழிச்சாலை என்ற வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி, மிகப் பரபரப்பாக இயங்கிக்கொண்ட்இருந்த நாட்கள்.

காலையில் நண்பர் செல்வம் அவர்களின் வீரியமான சவுக்கடித் தலையங்கங்கள், மாலையில் மனதை வருடும் எனது ராகரதம் என அறவழிச்சாலை குழு தொடர்ச்சியாக ஆர்வமூட்டும் குழுவாக இயங்கிக்கொண்டிருந்தது.

அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, புதுக்கோட்டை பள்ளி மாணவர்களை ஒரு நாடகம் நடிக்கச் செய்து அதை அந்தக் குழுவில் நவம்பர் 14 2017 அன்று பகிரலாம் என்பது எனது திட்டம். நானே எழுதலாம் என்று நினைத்திருந்தபோது, தற்செயலாக எழுத்தாளரும் பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநருமான திரு. மாரி செல்வராஜ் அவர்களின் மறக்கவே நினைக்கிறேன் புத்தகத்தைப் படித்தேன். அதிலிருந்த சோத்துக்களவானிகள் என்ற பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்தப் பையன்களைப்போலத்தான் நானும் என்றோ எங்கோ இருந்திருக்கிறேன் என உள்ளுக்குள் குத்திய உணர்வால் உந்தப்பட்டு, அந்தக் கதையையே நாடகமாக்குவது என முடிவுசெய்தேன். நாடகம் என்றால், காட்சிப்படுத்துவது அல்ல, வானோலியில் ஒலிபரப்பாகும் ஒலிச்சித்திரம் போன்று உருவாக்குவது.

அத்தனையையும் விவரிக்கும் உரையாடல்கள், இடையிடையே தருணத்தின் கொந்தளிப்பை மெருகூட்டிக் காட்ட திரைப்பட பாடல்களிலிருந்து எடுத்துக்கொண்ட இசைக்கோர்வைகள் என கிட்டத்தட்ட ஒருவார முயற்சியில் எல்லாம் நன்றாகவே கைகூடியது.

துண்டு துண்டாக மாணவர்களிடம் பதிவுசெய்த உரையாடல்களையும் பின்னணி இசையையும் கோர்த்து முழுமை பெற்ற ஒலிச்சித்திரமாக குழந்தைகள் நாளில் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்தோம். பெரிதான வரவேற்புகள் எதுவும் இல்லையெeன்றாலும் மனதுக்கு மிக மகிழ்ச்சியைக் கொடுத்த முயற்சி அது என்று சொல்லலாம்.

அதாவது குழந்தைகள் நாளில் நானும் என் குழந்தைப் பருவத்திற்குப் போய்த் திரும்பிய உணர்வை ஏற்படுத்தியது அந்த சிறு முயற்சி. அத்தோடு பாடம் தாண்டிய இத்தகைய செயல்களுக்காய் சிறப்புப் பள்ளி மாணவர்கள் அதிகம் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்த தருணம் அது.

***ப. சரவணமணிகண்டன்

Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

3 replies on “குழந்தைகள் நாளில் குழந்தையாக”

குழந்தைகள் தினத்தில் குழந்தையாக அருமையோ அருமை. எந்த ஒரு தகவல்களையும் சரியான நேரத்தில் பயன்படுத்துவதில் உங்கள் திறமையை பல சமயத்தில் பார்க்க முடிகிறது. கடந்த கால நிகழ்வுகளை மீண்டும் நினைவூட்டியதற்கு மிகுந்த மகிழ்ச்சி உங்களுடைய படைப்புகள் மென்மேலும் வளம் பெறட்டும்.

Like

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.