சமீபத்தில் பத்மஸ்ரீ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் போராளி அப்துல் ஜப்பார். 1984ல் நிகழ்ந்த போபால் விஷவாயு கோர நிகழ்வில் தனது பெற்றோரை மட்டுமல்ல ஐம்பது விழுக்காடு பார்வையையும் இழந்துவிட்டவர். ஆனாலும், அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பில் நின்று அவர்களுக்கு அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர தன் ஆயுள்வரை போராடிக்கொண்டே இருந்திருக்கிறார். அரசுக்கெதிரான போராட்டமாக மட்டும் தன் வழிமுறையை அவர் வைத்துக்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தொழிற்பயிற்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் களப்பணி ஆற்றியிருக்கிறார். விருது பெறும் முன்னரே அவர் மறைந்துவிட்டாலும் அவர் விட்டுச் சென்றிருக்கிற உலகத்திற்கான ஒளியின் கீற்று அவரின் புகழை நிலைக்கச் செய்யும்.
அப்துல் ஜப்பார்: நீதிக்கான போராட்டத்துக்கு அங்கீகாரம்
***ப. சரவணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
