21 மாணவர்கள் பெயர்கொடுத்து, இறுதியாக 17 மாணவர்கள் பங்கேற்பில் CCC by Helenkeller பயிற்சிமையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட வினாடிவினா போட்டி நடைபெற்றது. முதன்முறையாக ஒரே நேரத்தில் யூட்டூப் மற்றும் கிளப் ஹவுஸ் என இரு தளங்களிலும் நிகழ்வு நேரலை செய்யப்பட்டது. தொழில்நுட்பம், ஒருங்கிணைப்பு என வினாடிவினா நிகழ்ச்சியின் மொத்த பாரத்தில் பெரும்பகுதியைத் தன் தோளில் சுமந்த சௌண்டப்பனுக்கு நன்றிகள் சொல்லிக்கொண்டே இருக்கலாம். குரல்தான் கொஞ்சம் கம்முகிறது. மற்றபடி கேட்கப்பட்ட வினாக்கள் அத்தனையும் எளிமையானவை அதேசமயம் தேர்வுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நுட்பமானவையும்கூட.
ஜூம் வழியில் என்பதால், அவ்வப்போது தொழில்நுட்பம்தான் காலை வாரிக்கொண்டே இருந்தது. ஆனாலும், தொடர்ச்சியான உரையாடல்கள் வழியே அதை எளிதாகக் கடக்க முடிந்தது.
எப்போதும் போலவே, மதிப்பீட்டாளராக அன்புத் தங்கை மோனிஷா மிகவும் நிதானமாகத் தன் பணியைச் செய்தார். ஆகவே மதிப்பீடு தொடர்பான குழப்பங்கள் ஏற்படவே இல்லை.
இடையிடையே திரு. பாலநாகேந்திரன் அவர்களின் நச் கமெண்டுகள் நிகழ்வைத் தோய்வின்றி நடத்திச் செல்ல உதவியாக இருந்தது. நிகழ்ச்சியின் பரபரப்பு அனைவரையும் படிப்படியாகத் தொற்றிக்கொள்ளத் தொடங்கியதில், அறிவிக்கப்பட்ட இரண்டு முதல்ப்பரிசுகளுக்கும் நிகழ்ச்சிக் களத்திலேயே நன்கொடையாளர்கள் கிடைத்தனர்.
நண்பர் சுரேஷ்குமார் மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சௌண்டப்பன் இருவரும் முதல்ப்பரிசுகளுக்கான தொகைகளான தலா ரூ. 1500 தருவதாக ஒப்புக்கொண்டனர்.
நிகழ்வு வெற்றிபெற உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
