
(ட்ரிங், ட்ரிங், ட்ரிங்)
“ஹலோ யாரு?”
“இந்த நோட்டீசு … கண் பார்வ …”
“ஆமாங்க. சொல்உங்க”
“எப்ப வரணும்?”
“நாளைக்கே வாங்க”
“நாளைக்கு ஒன்பது மணிக்கு வரலாமா?”
“ஊம். ஒரு பத்து பத்தரை மணிக்கு வாங்க.
“ஃப்ரீதானே எல்லாம்?”
“ஆமாமா. சாப்பாடு, தங்க இடம், போட்டுக்க துணி எல்லாமே ஃப்ரீதான். அரசாங்கம் கொடுக்குது.””
“அது போதுங்க. ரொம்ப சந்தோஷம். வீட்டில கூட்டிட்டு வரலாமா?”
“தாராளமா கூட்டிட்டு வாங்க. அவுங்களுக்கும் பார்க்கணுமுனு ஆசை இருக்கும்ல?”
“இல்ல அவுங்களுக்கெல்லாம் ஒண்ணும் இல்ல.”
“அப்படினா நீங்களும் பையனும் மட்டும் வந்தாப்போதும்.”
“பையன் இல்லையே.”
“பையன் இல்லையா? பையன்தானே வரணும்.”
“அவன் எங்க வாறது? அவன்தான் பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு எங்ககிட்ட சண்டைபோட்டுட்டு போய்ட்டானே. நாசகாரி ஒரே மாசத்தில குடும்பத்தை ரெண்டா பொளந்துட்டாலே.”
“ஐயா! நீங்க என்ன சொல்றீங்க?”
“அது பெரியகத. அதைவிடுங்க. இப்போ எனக்கு கண்ணில பொறை மறைக்குது. உங்க முகாம் மூலமா அதைச் சரிபண்ணிட்டா ஏதாவது வேலைக்குப் போயி நானும் என் பெண்ஜாதியும் குறைகாலத்த ஓட்டிடுவோம்.”
***
‘ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல, – நான்
அவதாரம் இல்லையம்மா, தத்துவம் சொல்ல.’
இப்ப எங்க ரெண்டு பேருக்குமான mind-song இதுவாத்தானே இருக்க முடியும்?
சிரித்த முகத்தோடே பள்ளி பற்றிய தகவலையும் மறக்காமல் அனைவருக்கும் பகிருங்கள் தோழமைகளே!
#this-is-time-for-admission
***
ப. சரவணமணிகண்டன்
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
