வெளியானது ஆர்பிட் ரீடர் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
வழிகாட்டு நெறிமுறைகள்
வழிகாட்டு நெறிமுறைகள்

பார்வைத்திறன் குறையுடையோர் எளிதில் பிரெய்லி முறையில் கற்பதற்கு

ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகங்களை (Books) பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி

(Electronic) Braille reader வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையரின் கடிதத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் இதோ!

  1. பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட Visually Impaired மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
  2. இளநிலை கல்வி முடித்தவராக இருக்க வேண்டும்.
  3. முதுநிலைப் படிப்பு படிப்பவராகவோ அல்லது TNPSC போன்ற போட்டித்தேர்வுக்குப் பயிற்சி பெறுபவராக இருத்தல் வேண்டும்.
  4. பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  5. நபருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
  6. மாற்றுத்திறனாளிகள் அலுவலர், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்லி முறையில் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் பிரெய்லி எழுத்தை வாசிக்கும் புலமை பெற்ற பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆகிய மூவர் அடங்கிய குழுவினர் மூலம் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து Electronic Braille reader வழங்கப்பட வேண்டும்.
  7. Electronic Braille reader வழங்கப்பட்ட உடனே பயனாளிகளின் பெயர் மற்றும் முகவரி அடங்கிய விவரங்களை இவ்வாணையரகத்திற்கு பயனீட்டு சான்றிதழுடன் அனுப்பப்பட வேண்டும்

மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி பயனாளிகளுக்கு Electronic Braille reader வழங்கப்பட வேண்டும்

அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர்களும் இதன் மூலம்

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பகிர

1 thought on “வெளியானது ஆர்பிட் ரீடர் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *