பாரா ஒலிம்பிக் மூலம் புகழ்பெற்று, அரசின் அரவணைப்பைப் பெற்றும் அரசு உறுதியின்படி அரசுப்பணி வழங்கப்படாத மாரியப்பன் அவர்களின் நினைவும் வந்துபோனது. அவருக்குக் கிடைத்த குறைந்தபட்ச அரவணைப்புகூட விஜேஷாந்திக்கு இல்லை என்பதை நினைக்கையில் ஊனத்தில்கூட பேதம் பார்க்கும் அரசின் ஊனப்பட்ட அணுகுமுறை அறுவறுப்பாய்படுகிறது.
Month: Mar 2021
கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பளித்து வெற்றிபெற வைத்த கட்சி திமுக என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்கள் அதே அங்கீகாரத்தை வழங்குவார்கள் என்று அவர் மட்டும் அல்ல, அனைவருமே நம்பினோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக அரசியல் சாசனப் பிரிவுகள் 15 மற்றும் 16 ல் உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
Phd பட்டம் பெற்றது,
கல்லூரியில் பாடம் நடத்தவா…?,
இரயிலில் மிட்டாய் விற்கவா…?
அன்புத் தோழிகளே! சகோதரிகளே!
உலகப் பெண்கள் தினத்தை ஒட்டி, மாற்றுத்திறனாளி பெண்களின் வாழ்வியல் மிக விரிவாகப் பேசப்பட வேண்டும் என விழைகிறது சவால்முரசு. எனவே இந்த மாதம் முழுவதும் சவால்முரசின் வழக்கமான கட்டுரைகளுக்கிடையே மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் அவர்கள் குறித்த மாற்றுத்திறனாளி அல்லாத இருபாலரின் படைப்புகளை வரவேற்கிறது ஆசிரியர்க்குழு. மாற்றுத்திறனாளிப் பெண்களே! உங்கள் படைப்புகள் எதைப்பற்றியும் இருக்கலாம். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புதுமையான சமையல்/அழகு/வீடு பராமரிப்புக் குறிப்புகள், நீங்கள் படித்த புத்தகம் பற்றிய பத்திகள், உங்கள் சொந்த அனுபவங்கள் என எது […]
மகளிர்தின ஸ்பெஷல்: இருளும் ஒளியும்
இனி பார்வைக்கே வாய்ப்பில்லை, இருப்பதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டேதான் போகும் என்ற நிலையில், ஒரு மனைவியாய், தாயாய், புகுந்த இடத்தில் தன் இருப்பைப் பெருமையோடு முன்வைக்க விரும்பிய அவருக்குப் பேரதிர்ச்சி. எண்ணற்ற கனவுகளும் கற்பனைகளும் கொண்டிருந்த தனது வண்ண உலகம் வசீகரமிழந்துவிடப்போகிறது என்ற உண்மைக்கு முகம் கொடுக்க நேர்கிற ஒரு பெண்ணின் மனநிலையை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட இயலாது.
நோதல் வேண்டாம் தோழர்களே! நோன்பு துறங்கள். பசித்திருந்தது போதும், உணவு எடுங்கள். காந்தியையே மறந்தவகளுக்கு காந்தியமொழி புரியாது; – நம்மைக் கருணைச் சரக்காய் பார்ப்பவருக்கு நம் கண்ணியம் எதுவும் தெரியாது. இன்று நம் முழக்கங்கள் நிறைக்கும் இந்த முற்றத்திற்கு நாம் முடிந்த மட்டும் எத்தனைமுறை வந்து சென்றோம், எண்ணிச் சொல்ல இயலுமா இவர்களால்? கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இடற்றும் பள்ளங்கள், ஏமாற்றும் மேடுகள், அரற்றும் சாலைகள் என அத்தனையும் கடந்து ஆண்டாண்டு கோரிக்கைகளோடு அலுவலகம் புகுந்தால் […]
