வெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
தமிழ்நாடு அரசு சின்னம்
தமிழ்நாடு அரசு சின்னம்

உடல் உறுப்பில் உள்ள சில குறைபாட்டால் அன்றாட வாழ்வில் பல சிக்கல்கள், அங்கீகாரமின்மை, அணுகல் தன்மையற்ற சூழல், வாய்ப்புகள் மறுப்பு போன்றவற்றையே பெருமளவில் சந்தித்தாலும், இவையனைத்தையும் முறியடித்து, முன்னேறி, பிடித்த பணியில்லையென்றாலும் கிடைத்த பணிவாய்ப்பை பிடித்துச்செய்ய துடிக்கும் மாற்றுத்திறனாளி பணியாளர்களை ஆற்றுப்படுத்த, அவர்கள் ஏற்றம்காண உதித்துள்ளது அலுவலகம்தோறும் மாற்றுத்திறனாளிகளின் குறைதீர் அலுவலர் நியமித்தல் என்னும் அரசாணை.
2016- ஆம் ஆண்டு நடுவண் அரசால் ஏற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டம், அத்தியாயம் 4ல் பிரிவு 23-ல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்ட விதிகள் 2017 பிரிவு 10ல் – ஒவ்வொரு துறை நிர்வாகத்திலும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கென குறைதீர் அலுவலர் நியமிக்கப்பட்டு, பணியாளர்களது குறைகளை நிவர்த்தி செய்திட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
” ( 1 ) No Government establishment shall discriminate against any person with disability in any matter relating to employment.
வேலைவாய்ப்பு தொடர்பாக எந்த அம்சத்திலும் எந்த ஒரு அரசு நிறுவனமும் ஊனமுற்ற நபரை பாகுபடுத்தல் கூடாது.
( 2 ) Every Government establishment shall provide reasonable accommodation and appropriate barer free and conducive environment to employees with disability
ஊனமுற்ற பணியாளருக்கு ஒவ்வொரு அரசு நிறுவனமும் நியாயமான உள்ளடக்கமும் போதுமான அளவு தடைகளற்ற மற்றும் சுமூகமான சூழல் வழங்குதல் வேண்டும்
 ( 3 ) No promotion shall be denied to a person merely on the ground of disability .
ஊனத்தை மட்டுமே காரணம் காட்டி எந்த ஒரு நபருக்கும் பதவி உயர்வு மறுத்தலாகாது.
 ( 4 ) No Government establishment shall dispense with or reduce in rank , an employee who acquires a disability during his or her service : Provided that , if an employee after acquiring disability is not suitable for the post he was holding , shall be shifted to some other post with the same pay scale and service benefits : Provided further that if it is not possible to adjust the employee against any post , he may be kept on a supernumerary post until a suitable post is available or he attains the age of superannuation , whichever is earlier
பணியாளர்கள் பணி காலத்தின்போது ஊனமுற்றால் எந்த ஒரு அரசு நிறுவனமும் அந்நபரை பணியை விட்டு நீக்குவதோ அல்லது படிநிலை குறைத்தலோ கூடாது. அந்தப்பணிக்கு தகுதியில்லையென்றால் நிகரான சம்பளம் உள்ள இதர பணி பலன்கள் கொண்ட நிகரான பணிக்கு மாற்றுதல். அல்லது  எந்தபதவியிலும் பணியாளர் அனுசரிக்க முடியவில்லையென்றால் அவரை பதவி முதிர்வு நிலை அல்லது பணி ஓய்வு பெறும் வயது இதில் எவை முன்னால் வருகிறதோ அதுவரையில் பணியில் தொடரலாம்.
 ( 5 ) The appropriate Government may frame policies for posting and transfer of employees with disabilities .
உரிய அரசு ஊனமுற்ற பணியாளர்களின் பணிநியமனம் மற்றும் பணியிட மாற்றம் குறித்து கொள்கையை உருவாக்குதல்.
மேற்குறிப்பிடப்பட்ட நோக்கங்கள் நிறைவேற, ஒவ்வொரு அரசு நிறுவனமும் குறைதீர் அதிகாரி ஒருவரை  நியமனம் செய்து, தலைமை ஆணையாளர் அல்லது மாநில ஆணையருக்கு குறைதீர் அதிகாரி நியமனம் குறித்து தகவல் அனுப்புதல் வேண்டுமென வலியுறுத்துகிறது.
“Every Government establishment shall appoint a Grievance Redressal Officer for the purpose of section 19, section 20 and shall inform the Chief Commissioner or the State Commissioner , as the case may be, about the appointment of such officer ” .
எந்த ஒரு பாதிக்கப்பட்ட ஊனமுற்ற பணியாளரும் குறைதீர் அதிகாரியிடம் புகார் செய்யலாம். அவர் புகார் பதிவுசெய்யப்பட்ட இரண்டு வாரத்திற்குள் விசாரணை மேற்கொண்டு தீர்வளிக்கவேண்டும்.
இச்சட்டத்தில் எழுத்துக்களாக பொறிக்கப்பட்டுள்ள இவைகளை நடைமுறைப்படுத்தப்படவேண்டுமென்று பார்வையற்ற அரசு பணியாளர் நலச்சங்கம் உள்ளிட்ட ஊனமுற்ற அரசு ப்பணியாளர் நலச்சங்கங்களின் தொடர் வலியுறுத்தலினாலும், மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் தீர்க்கமான முயற்சியிலும் நமது மாநிலத்தில்  கிடைத்த வெற்றிதான் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினால் வெளியிடப்பட்ட 02.12.2020 நாளிட்ட, அரசாணை. என். 16.

அரசாணையைப் படிக்க:

ஆணையர் திரு. ஜானிடாம் வர்கிஸ்
ஆணையர் திரு. ஜானிடாம் வர்கிஸ்

இவ்வரசாணையில் ஒவ்வொரு துறை / நிர்வாகம் / அலுவலகத்திலும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்  பதவி படிநிலைக்கு குறையாத அலுவலர்  officer not below the rank of a Gazetted Officer ஒருவரையோ அல்லது மூத்த அலுவலர் senior most officer ஒருவரையோ  குறைதீர் அதிகாரியாக நியமித்து, அவரது விவரங்களை உரிய துறை வலைதளத்தில் இடம்பெறச் செய்ய வலியுறுத்துகிறது. மேலும் அந்த குறைதீர் அலுவலர் பராமரிக்கப்படவேண்டிய புகார் பதிவேடு குறித்தும் தெளிவாக இடம்பெற்றுள்ளது.
மேற்படிக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்தும் நோக்கில், குறைதீர் அலுவலர் ஒருவரை நியமிக்குமாறு தெரிவித்து, மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஒவ்வொரு துறைக்கும்  கடிதம் அனுப்பியுள்ளார் என்பதை அறியும்பொது மனம் மகிழ்வடைகிறது.

இவ்வாறான செயல்பாடுகள் முன்னமே அமலாக்கத்தில் இருந்திருந்தால், மனவுளைச்சலால் தனது உயிரைமாய்த்துக்கொண்ட  திருச்சி மாவட்டத்தை  பூர்விகமாக கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த நிர்மல் என்னும் பார்வையற்றவரையும், கழிப்பறை வசதியற்ற காஞ்சிபுரமாவட்ட வேளாண் பொறியியல் அலுவலகத்தில் பணியாற்றிய சரண்யா என்னும் மாற்றுத்திறனாளி உள்ளிட்டோரை இச்சமூகம் காவுகொடுத்திருக்காது.
பணியிட சூழல்  உகந்ததாக இல்லையா? பணியிடத்தில் அடிப்படை வசதிகள்கூட செய்யப்படவில்லையா? பணியிடத்தில் நமக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையா?  நம்மால் இயன்ற பணிகள் அவ்வலுவலகத்தில் இருந்தும் அவை நமக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லையா? ஊனத்தின் பெயரால் பாகுபாடு காணப்படுகிறதா? நமக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றதா? நமக்கான நள்விடியல் இது என்றே எண்ணத் தோன்றுகிறது.

எனினும், நிலுவையாய் நீர்த்துப்  போகும் எண்ணற்ற கோப்புகளுடன் இவையும் கலந்திட கூடாதே!!
இருக்கின்ற எண்ணற்ற பணியில் இவையெல்லாம் முக்கியமானதா என்ற அலட்சியம் மேலோங்கிட கூடாதே என்ற பரிதவிப்பும் கூடவே பிறக்கிறது.

என்ன செய்ய வேண்டும் அரசு?

மாற்றுத்திறனாளி பணியாளர்களை அணுகும் முறை, ஒவ்வொருவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அணுகல்தன்மையான சூழல் எது, அவர்களது திறன்கள் உள்ளிட்டவற்றை குறித்த அடிப்படை புரிதல் நியமிக்கப்படும் குறைதீர் அலுவலருக்கு அவசியம் கற்பிக்கப்பட வேண்டும்.
மேலும் நியமிக்கப்படும் குறைதீர் அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம், 1995, மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம், 2016 போன்றவற்றை குறித்தும் உரிய பயிற்சிகள் மற்றும் வழிகாட்டு நெறிகள் வழங்கி, அவர்களது செயல்பாட்டை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்வது அவசியம்.

வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை, கோப்புகளோடு ஒரு கோப்பாகத் தூங்குவதும், அல்லது மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களைக் காக்கும் காப்பாக அவர்களைத் தாங்குவதும் அரசின் கையில்தான் இருக்கிறது.

***

ஆசிரியர்க்குழு

தொடர்புகொள்ள: mail@savaalmurasu.com

பகிர

7 thoughts on “வெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை

  1. சாமி வரம் தந்திருக்கிறது இனி பூசாரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்

  2. A lot of thanks for the efforts taken.

  3. மாற்றுத்திறனாளி அரசு ஊழியரான எனக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டுள்ளது இதனை தவிர்த்து சொந்த இடத்திலேயே பணிபுரிய வழிவகை உள்ளதா அதற்கான அரசாணை இருந்தால் அனுப்பவும் தங்களது தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் அல்லது அலைபேசி எண் இருந்தால் அல்லது வாட்ஸ்அப் குழுமம் ஏதேனும் இருந்தால் அனுப்பவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *