Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்

விடுமுறை காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி “வழங்க வேண்டும்” மதுரை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை நடவடிக்கைகள்

விடுமுறைக் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படியினை பிடித்தம் செய்யத் தேவையில்லை என மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறைக் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படியினை பிடித்தம் செய்யத் தேவையில்லை என மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தின் மதுரைக்கிளை அனுப்பிய கடிதத்திற்கான பதிலாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் , மதுரை ,

ஒ.மு.எண் : 5169 / ஆ 3 / 2020 , நாள் : 09.2020

பொருள் - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - மாற்றத் திறனாளர்களுக்கான

ஊர்திபடி - விடுமுறை காலங்களுக்கு கார்திபடி வழங்குவது - சார்பு பார்வை - பார்வையற்றோர் ஆசிரியர்களுக்கான கூட்டமைப்பு , மதுரை கிளை

கடிதம் , நாள் 04.09.2020 )

பார்வையில் காணும் கடிதத்தின்படி அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் மாற்றத் திறன் கொண்ட பணியாளர்களுக்கு விடுமுறை காலங்களுக்கு ஊர்தியடி வழங்குவது சார்பான பல்வேறு துறைகள் மற்றும் சென்னை , தலைமைச் செயலக மாற்றுத் திறனாளிகள் நலச் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட கடிதங்கள் மற்றம் ஆணைகள் தகவலுக்காகவும் , தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது .

முதன்மைக்கல்வி

பெறுநர்

1 மாவட்டக் கல்வி அறுவர்கள் ,

மதுரை / மேலூர் , திருமங்கலம் / உசிலம்பட்டி , 2. அனைத்து தொடக்கக் கல்வி மற்றம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் . பார்வையற்றோர் ஆசிரியர்கள் கூட்டமைப்பு எண் .5 , ஒப்பல் சிட்டி , புரவாடி தெரு , எஸ்.கே.ஆர் நகர் , அவனியாபுரம் , மதுரை -625012
மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

3 replies on “விடுமுறை காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி “வழங்க வேண்டும்” மதுரை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை நடவடிக்கைகள்”

மாற்றுதிறன் ஆசிரியர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு,விடுமுறைகாலத்திற்கான போக்குவரத்து படியினை( Auditing) திருப்பிசெலுத்த கூறுகிறார்கள்.திருப்பி செலுத்த தேவையில்லை என்பதற்கான அரசாணை இருந்தால் அனுப்பவும்.நன்றி

Like

அரசு உதவி பெறும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியரில்லா பணியாளர் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுமுறை காலங்களில் ஊர்திப்படியின் அரசானையை பதிவிடவும்

Like

Leave a reply to C.Ganesh Cancel reply