“மாற்றுத்திறனாளிகள் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை அரசு அமல்ப்படுத்துவதே இல்லை” தலைமைச்செயலர் காணோலிக் காட்சி மூலம் ஆஜராகி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
குறிப்பிட்ட செய்தி அடங்கிய தி இந்து மின்னிதழின் பக்கம்
பட மூலம், தி இந்து ஆங்கில மின்னிதழ்

பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் தடையின்றிப் பயணிக்கும் வகையில் கூடுதல் வசதிகொண்ட பேருந்துகள் வாங்கப்படாதது குறித்து நீதிபதிகள் தங்கள் அதிர்ப்தியை வெளிப்படுத்தினர். அத்தோடு, எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் தேதி இது தொடர்பாக காணொளிக் காட்சி வாயிலாக விளக்கம் அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டனர்.

கல்வி நிறுவனங்கள், பொதுக்கட்டடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் தளங்களையும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றியமைப்பது தொடர்பாக, கடந்த 2005ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கூடுதல் வசதிகொண்ட பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறையால் 4381 பேருந்துகள் வாங்கப்பட்டும், அவற்றில் மாற்றுத்திறனாளிகள் தடையின்றிப் பயணிக்க எந்த ஒரு கூடுதல் வசதியும் ஏற்படுத்தவில்லை.

இதனை சுட்டிக்காட்டிய சத்யநாராயணா மற்றும் ஹேமலதா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கடந்த 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எதையும் தமிழக அரசு நிறைவேற்றாதது குறித்துத் தமது கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்ததோடு, எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் தேதி, தமிழக தலைமைச்செயலர் காணொளிக் காட்சி மூலம் ஆஜராகி பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

பகிர

2 thoughts on ““மாற்றுத்திறனாளிகள் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை அரசு அமல்ப்படுத்துவதே இல்லை” தலைமைச்செயலர் காணோலிக் காட்சி மூலம் ஆஜராகி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *