Categories
announcements books differently abled news from the magazine important programs viralmozhiyar

விரல்மொழியர் 25: வெற்றிவிழா அழைப்பிதழ்

11 ஜூலை, 2020 அன்புடையீர்! பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான விரல்மொழியரின் 25-ஆம் இதழ் வெளிவருவதை ஒட்டி வெற்றி விழாக் கொண்டாட்டம் நாளை 12-07-2020 ஙாயிற்றுக்கிழமை அன்று சூம் (Zoom) அரங்கில் நடைபெற உள்ளது. அரங்கமுகவரி: https://us02web.zoom.us/j/89029942706  Meeting ID: 890 2994 2706  இதழுக்குப் பங்காற்றிய சேவையாளர்களின் வாழ்த்துரைகளோடு, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் களைகட்டவிருக்கின்றன. உங்கள் அனைவரையும் வரவேற்க அன்போடு காத்திருக்கிறோம். நன்றி. இங்ஙனம் ஆசிரியர் குழு விரல்மொழியர் மின்னிதழ் http://www.viralmozhiyar.com […]

Categories
announcements of district collectors corona differently abled news jeyabalan national ID card relief pension

உட்கார்ந்த இடத்திலேயே சமூகப்பணி, உதவிக்கு விரைந்துவந்த மாவட்ட ஆட்சியர்; கரூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

10 ஜூலை, 2020 கரூர் காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஜெயபாலன். பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் நொடிநேர சமூகப்பணி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்கிற 70 வயது மாற்றுத்திறனாளி தனது அடையாள அட்டை தொலைந்துவிட்டதால், அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்துள்ள ரூ. 1000 நிவாரணத்தைப் பெறமுடியாமல் தவித்து வந்திருக்கிறார். தனக்குப் புதிய அடையாள அட்டை வழங்கும்படி வட்டாட்சியரிடமும் மனு கொடுத்துள்ளார். இதற்கிடையே, மாரியப்பனுக்கு நிவாரணம் வழங்க மறுத்த கிராம நிர்வாக […]

Categories
association letters association statements court csgab differently abled department differently abled news Govt. policies affected differently abled PTFB seminar

நன்றிகளும் வாழ்த்துகளும்

9 ஜூலை, 2020 ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92, 93 ஆகிய பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளவிருந்த சட்ட திருத்த நடவடிக்கையினைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது நடுவண் அரசு. கரோனாவுக்குப் பின்னான காலகட்டத்தில், நாட்டின் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும்பொருட்டு, நடுவண் அரசால் இயற்றப்பட்ட 19 சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்தது நடுவண் அரசு. அதன்படி, ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் உயிர்ப்பாகமான ‘குற்றமும் தண்டனைகளும்’ என்கிற 16ஆம் அத்தியாயத்தின் பிரிவுகளான 89, 92, […]

Categories
agitation court csgab differently abled news Govt. policies affected differently abled news about association seminar

திருத்தத்திற்கெதிரான தமிழகத்தின் குரல்கள்; திரட்டும் முயற்சியில் பேரவை

7 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92 மற்றும் 93 ஆகியவற்றில் நடுவண் அரசு சில திருத்தங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்த திருத்தங்கள் எவை, அரசின் முடிவை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விவாதங்களை முன்னெடுக்கிற முதல் களமாய் அமைந்தது பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் ஜூம் வழிக் கருத்தரங்கு. அந்த நிகழ்வின் சில துளிகள் இங்கே. “எல்லாச் சட்டங்களும், அவற்றை மேம்படுத்தும் பொருட்டு திருத்தப்படும். நமது ஊனமுற்றோருக்கான […]

Categories
சட்டம் law

சட்ட திருத்தம் இல்லை, நீதித் திரிப்பு

31 ஜூலை, 2020 ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நூறு நாட்கள் கடந்த பின்னும், அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு, மத்திய மாநில அரசுகள் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. மாற்றுத்திறனாளி அமைப்புகளின் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் மற்றும் சட்டப் போராட்டத்தின் விளைவாக, தற்போது தமிழக அரசு அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து அதனை வினியோகிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். தெளுங்கானா உயர்நீதிமன்றமோ, மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ஏற்படுத்தி அவர்களுக்கு உடனடியாக […]

Categories
association letters association statements cochlear implant corona court differently abled commissioner differently abled department differently abled education differently abled news

“மாற்றுத்திறனாளிகளுக்கு யாரும் இல்லை என நினைக்கவேண்டாம்” டிசம்பர் 3 தீபக்நாதன் கொந்தளிப்பு

4 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளியைத் தாக்கிய காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிசம்பர் 3 இயக்கத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் காவல்த்துறை கண்காணிப்பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்த்துறையின் அத்துமீறலை உலகமே கண்டித்து வருகிறது. இந்நிலையில், வழக்கில் சிக்கியுள்ள அதே காவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு, மாற்றுத்திறனாளி ஒருவரையும் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு […]

Categories
நம்பிக்கை குரல் common voice gowthami online business

நம்பிக்கை மொழி

ஜூலை 31, 2020 கௌதமி வணக்கம் என் பெயர் கௌதமி. சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம். எனக்குப் பிறந்ததிலிருந்தே பார்வையில பிரச்சனை இருந்துச்சு. கொஞ்சம் வருஷத்துக்கு முன்னால ஒரு ஆப்பிரேஷன் பண்ணினாங்க. அதுக்கு அப்புறம் இருந்த கொஞ்சப் பார்வையும் போயிடுச்சு. படிப்பும் அதிகம் இல்லை சேலம் பார்வையற்றோருக்கான அரசுப்பள்ளியில எட்டாவதுவரைக்கும்தான் படிச்சேன். இப்போ எனக்கு 25 வயசாகுது. மேலும் படிச்சு நல்ல ஒரு அரசு வேலைக்குப் போகனும்கிறதுதான் என் எண்ணம். அதனால பத்தாவது பரிட்சைக்குப் ப்ரிப்பேர் […]

Categories
arunachalam condolence corona disabled news editorial livelihood society

களப்பணி வீரனுக்கு இதழின் அஞ்சலி

30 ஜூன், 2020 இந்தியப் பார்வையற்றோர் முற்போக்கு சங்கத்தின் தலைவர் திரு. A.K. அருணாச்சலம் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அறுபதுகளில் இருக்கும் அருணாச்சலம், தன் வாழ்நாளின் இறுதிவரை பார்வையற்றோர் தொடர்பான களப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஊரடங்கினால் வருமானம் இழந்து தவித்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பார்வையற்ற குடும்பங்களுக்கு ஓடோடி உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தவர். அவருடைய களப்பணிகளில் அவருடைய மனைவியும் எப்போதும் உடன் இருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். அவர்களின் […]