600க்கு 571, “ஐஏஎஸ் எனது வாழ்நாள் கனவு” அடித்துச் சொல்கிறார் காவியா

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

16 ஜூலை, 2020
graphic பிரெயில் படித்தபடி மாணவி காவியா
மாணவி காவியா
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அந்தப் பள்ளி நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது.

அந்தப் பள்ளியில் தங்கிப்பன்னிரண்டாம் வகுப்பு படித்த  நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகள் காவியா 600 மதிப்பெண்களுக்கு  571 மதிப்பெண்கள் எடுத்து சாதனைபடைத்துள்ளார். ஆறு பாடங்களிலுமே தொன்னூறுக்கு மேல் பெற்றுள்ள காவியா, தமிழில் 98, வரலாறு 99 மற்றும் அரசியல் அறிவியலில் 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இத்தனைக்கும் அரசியல் அறிவியல் பாடத்திற்கு கடந்த நவம்பர் மாதத்தில்தான் முறையாக ஆசிரியர் நியமிக்கப்பட்டா.

காவியாவைத் தொடர்புகொண்டு பேசினோம். “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஐஏஎஸ் ஆகனுங்கிறது என்னோட வாழ்நாள் கனவு. சென்னையில நல்ல கல்லூரில சேர்ந்து இளங்கலை வரலாறு படிக்கப்போறேன்” என்றவரிடம், ஆசிரியர்கள் உங்களை எப்படி ஊக்கப்படுத்தினார்கள் என்று கேட்டால், “நிறைய உற்சாகம் கொடுத்தாங்க. அதேநேரத்தில, பொருளியல் போன்ற முக்கியமான பாடங்களுக்கு டீச்சர் இல்லைங்கிறதும் ஒரு குறையா இருந்துச்சு. நாங்க ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்த மடிக்கணினியும் வரல. இந்த ஆண்டாவது எனக்கு அரசுகிட்ட இருந்து மடிக்கணினி கிடைச்சா, அது என் காலேஜ் படிப்புக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்கிறார் நம்பிக்கையோடு.
அந்த மாணவியின் கனவு நிறைவேற, வாசகர்களோடு இணைந்து சவால்முரசு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

 சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

10 thoughts on “600க்கு 571, “ஐஏஎஸ் எனது வாழ்நாள் கனவு” அடித்துச் சொல்கிறார் காவியா

  1. வாழ்த்துக்கள் காவ்யா. இறைவன் அருளால் தங்கள் வாழ்வில் மேன்மேலும் வெற்றி பெற்று சமுதாயத்தின் வழிகாட்டியாக இருப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *