
சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகள் நல அரசு சிறப்புப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறப்புப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமது பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை இணைய வழியில் நடைமுறைப்படுத்த ( covid 19 காலங்களில் ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
![]() |
| செயலியைப் பதிவிறக்க படத்தைக் க்லிக் செய்யவஉம் |
அதுசமயம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையாக ஒவ்வொரு வகுப்பிற்கும் தனியாக புலனக் குழுக்களை ( Whatsapp Group ) உருவாக்கிட வேண்டும். அக்குழுவில் பள்ளி தலைமையாசிரியர் , வகுப்பு ஆசிரியர் , பாட ஆசிரியர்கள் Admin ஆக கொண்டு வகுப்பு மாணவர்களின் திறன்பேசி எண்கள் உறுப்பினர்களாகக் கொள்ள வேண்டும். மாணவர்கள் பயனுறும் வகையில் , எளிதில் புரியும் வண்ணமாக 15 முதல் 20 நிமிடங்கள் கொண்ட காணொலிகளாக பாடக் கருத்துகள் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பார்வை திறன் குறைவுற்ற மாணவர்களுக்கு ஒலி வடிவிலும் , செவித்திறன் குறைவுற்ற மாணவர்களுக்கு சைகை மற்றும் ஒளி வடிவிலும் பாடம் பதிவேற்றப்பட வேண்டும். மேலும் தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி ( Kalvi Tv ) சேனலில் ஒளிபரப்பாகும் பாடங்களையும் , https://e-learn.tnschools.gov.in/welcome என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள | முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்பொருள் சார்ந்த காணொலிகளைக் கண்டு மாணவர்கள் பயன்பெற போதிய அறிவுரையும் வழிகாட்டுதலையும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் கிரமமாக அனைத்து வகுப்பிற்கும் நடைபெறுவதையும் , அனைத்து மாணவர்களும் பங்கேற்று பயன்பெறுவதை உறுதி செய்து தொடர் கண்காணிப்பு செய்து தலைமை ஆசிரியர்கள் அதன் சார்பான அறிக்கையை இயக்ககத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வருங்காலங்களில் zoom , google meet , webinar jam , big blue button போன்ற செயலிகள் மூலம் கற்பித்தல் பணி மேற்கொள்ள ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் ,” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.


2 replies on “சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வகுப்புகள், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் சுற்றறிக்கை சொல்வது என்ன?”
தொட்டு பயில்பவர்களுக்கு தொலைவிலிருந்து கல்வி.வாழ்த்துக்கள்.மிகப்பெரிய சவாலான இந்த காலத்தில். சிறப்பு பள்ளிகளில் மாற்று கல்வியை முன்னெடுப்பது பாராட்டுக்குரிய செயல் என்றாலும்.மாணவர்கள் பிரயிலை தொட்டு படிக்கும் சூழலை தாண்டி.இயல்பான குழந்தைகளுக்கு இணைய வகுப்புகள் மன ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்று கல்வியாளர்கள் உரைக்கும் சூழலில்.இந்த இணைய வழி வகுப்புகள் சிறப்பு குழந்தைகளை மன ரீதியில் பாதித்து விடாத என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக ஆறாம் வகுப்பு பயிலும் பார்வையற்ற மாணவனுக்கு அவனது சாதனங்களை இயக்க தெரியுமா.நிச்சயமாக அவனால் சாதனங்களை இயக்க முடியாத போது இயல்பாகவே அவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் அபாயம் இருக்கின்றது.என்னை பொருத்தவரை இந்த இணைய வழி வகுப்புகள் என்பது.சிறப்புப் பள்ளிகளில் பொதுப் பள்ளிகளில் இருக்கும் கொடுமைகளை இருப்பதாகவே உணர்கின்றேன்.
LikeLike
பெரும்பாலும் பார்வையற்ற மாணவர்களின் பெற்றோர். ஏழைகளாக இருப்பர்..தொலைபேசி கைபேசி எல்லாம் அவர்களிடம் இருக்காது இருந்தாலும் அதை பார்வையற்ற மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஏற்பாடு செய்யத் தெரியாது.பிரெயில் முறை அடிப்படை ஆறு புள்ளி போன்றவை எல்லாம் கைகளை பிடித்தான் சொல்லித்தர வேண்டும் இதை இணைய வழியில் சாதிக்க முடியாது..வசதி இருப்பவர்கள் இதை நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள் நல்ல விஷயம் தான் ஆனால் ஏழைகளின் குழந்தைகள்தான் இதிலே பயன் பெற முடியாத சூழல் ஏற்படும்..
LikeLike