ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் கரூர் லயன்ஸ் சங்கம்(சக்தி) இணைந்து நடத்திய சிறப்பாசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்து பேசியபோது, “சிறப்பாசிரியர் பணி சிறப்பான பணியாகும். மாற்றுத் திறனுடையோருக்கு நல்ல நிலையில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும். விபத்தில் இறப்பவர்களின் கண்களை தானமாகக் கொடுக்க அவர்களின் குடும்பத்தினர் முன்வர வேண்டும்” என்றார். தொடர்ந்து, சிறப்பாசிரியர்கள் அனைவருக்கும் புத்தகம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக, கடவூர் வட்டம் தென்னிலை ஊராட்சி கீழசக்கரக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளிக்கு முன் அறிவிப்பு இன்றி சென்ற ஆட்சியர் த.அன்பழகன், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் சி.முத்துக்கிருஷ்ணன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்த கவிதா, ஜெயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.


One reply on “நன்றி இந்து தமிழ்த்திசை: கரூரில் சிறப்பாசிரியர்கள் கவுரவிப்பு”
Nice
LikeLike