டேராடூனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் செகந்தராபாத் மற்றும் கொல்கத்தா மண்டல மையங்களை மூடுவது என்கிற நடுவண் அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக ஊனமுற்றோருக்கான தேசியமேடை (NPRD) அறிவித்துள்ளது. அதன் பொதுச்செயலாளர் முரலிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நடுவண் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்கள் 1997ல் உருவாக்கப்பட்டவை. இந்த இரு மையங்களிலும், சமூக மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எண்ணற்ற பார்வையற்றோர் […]
