நோதல் வேண்டாம் தோழர்களே! நோன்பு துறங்கள். பசித்திருந்தது போதும், உணவு எடுங்கள். காந்தியையே மறந்தவகளுக்கு காந்தியமொழி புரியாது; – நம்மைக் கருணைச் சரக்காய் பார்ப்பவருக்கு நம் கண்ணியம் எதுவும் தெரியாது. இன்று நம் முழக்கங்கள் நிறைக்கும் இந்த முற்றத்திற்கு நாம் முடிந்த மட்டும் எத்தனைமுறை வந்து சென்றோம், எண்ணிச் சொல்ல இயலுமா இவர்களால்? கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இடற்றும் பள்ளங்கள், ஏமாற்றும் மேடுகள், அரற்றும் சாலைகள் என அத்தனையும் கடந்து ஆண்டாண்டு கோரிக்கைகளோடு அலுவலகம் புகுந்தால் […]
