Categories
அறிவிப்புகள் செய்தி உலா

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் போட்டிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு:

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை, நமது உரிமைகளைப்பேசும், இந்த உலகிற்கு நம்மை எடுத்துச் சொல்லும் ஒரு சரியான களமாக படைக்க விழைகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அந்த வகையில், நமது அன்றாட வாழ்வியலை, சமூகம் சார் பிரச்சனைகளை, நம் அகம் சார் ஏக்கங்கள் மற்றும் நிறைவுகளைத் தொகுக்கும் முயற்சியாக கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் இடம்பெறுகின்றன.