மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளரின் அறிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் மற்றும் ரயில், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வசதிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.இவ்வழக்கு கடந்த அக்டோபர் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 2005ஆம் ஆண்டு முதல்,15 […]
