“என் பின்னாலேயே வா மாப்ள” என்று சொன்னபடியே, தன் தோளில் கைவைத்து உடன் நடந்த கனகராஜை தனக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டு, வலக்கையில் பிடித்திருந்த ஸ்டிக்கைத் தன் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, வீட்டின் முன் கேட்டைத் திறந்தான் சசி. “மாப்ள இங்க செருப்பை விடு” என்று சொன்னவனிடம், “இது வீட்டோட முகப்பா சசி?” என அறியாதவனாய் கனகு கேட்டான். “இது கார் பார்க்கிங் மாப்ள”. “கார் நிறுத்தவா? அப்டினா, புதுசா கார் வாங்கியிருக்கியோ?” “அட நீ வேற. கார் […]
