Categories
சவால்முரசு

“மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவோம்” ககன்தீப்சிங் பேடி உறுதி:

சிறு குறு விவசாயிகளுக்கான ரூ.6000 சிறப்பு நிதியுதவி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக வேளாண்துறை செயலாளர் வாக்குறுதி! TN Agri Secy assured on PM Kisan Samman Nidhi scheme Rs.6000/- மத்திய அரசு அறிவித்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 சிறப்பு நிதியுதவி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புதிய உரிமைகள் சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள விவசாயிகள் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 25% கூடுதலாக நிதியை உயர்த்தி வழங்கவும், மொத்தப் பயனாளிகள் […]

Categories
சவால்முரசு

மாற்றுத்திறனாளிகள் தேர்தல் கூட்டம் திண்டுக்கல்

நன்றி இந்து தமிழ்த்திசை நாளிதழ் 08.மார்ச்.2019 மாற்றுத்திறனாளிகள் சங்கங்க ளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத் திறனா ளிகள் நல அலுவலகத்தில் நடை பெற்றது. திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு தலைமை வகித்தார். தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணியபிரசாத் வரவேற்றார். கூட்டத்தில், தகுதியுள்ள விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சக்கர நாற்காலி வசதி உள்ளிட்டவை செய்துதரப்படவுள்ளது. மாற்றுத் திறனாளிகள் […]

Categories
சவால்முரசு

மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி நாமக்கல் ஆட்சியர் தகவல்

நன்றி இந்து தமிழ்த்திசை நாளிதழ் 08.மார்ச்.2019. நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடம் பிரெய்லி முறையிலான வாக்காளர் விழிப்புணர்வு புத்தகத்தினை ஆட்சியர் மு.ஆசியா மரியம் வழங்கினார். நாமக்கல் வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்தல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் […]

Categories
சவால்முரசு

பிரதமர் மீது புகார், வழக்குப் பதியக்கோரி காவல்நிலையத்தை நாடிய மாற்றுத்திறனாளிகள்

ஊனத்தை அரசியல் நையாண்டி செய்த பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாநில துணைத் தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் உள்ள மத்திய அரசின் உயர்க் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐஐடி) சார்பில் நடைபெற்ற […]

Categories
சவால்முரசு

பெரம்பலூர்; உதடு – உள் அண்ணம் பிளவுபட்டோருக்கு நாளை இலவச மருத்துவ முகாம்

நன்றி இந்து தமிழ்த்திசை பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உதடு, உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் நாளை (மார்ச் 7) காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்ட பொதுசுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்புத்துறை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்மருத்துவ முகாமில் பிறந்த குழந்தைகள் முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு […]

Categories
சவால்முரசு

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம்

நன்றி இந்து தமிழ்த்திசை கோவை பார்வையற்ற பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் தொடங்கியது. தேசிய பார்வையற்றோர் இணையம் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்தும், மத்திய மற்றும் மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம், வரதராஜபுரத்தில் நேற்று தொடங்கியது. முகாமுக்கு தேசிய பார்வையற்றோர் இணைய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். அம்பேத்கா் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கணேஷ், தணிக்கையாளர் சோமசுந்தரம், எல்ஐசி மேலாளர் சங்கர் […]

Categories
சவால்முரசு

நன்றி இந்து தமிழ்த்திசை – 2500ஆக உயர்த்தி வழங்கவேண்டும் – மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்:

நாகப்பட்டினம் மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளி கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் டி.கணேசன் தலைமை வகித்தார். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குவதை, மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்துக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டக் குழு உறுப்பினர்கள் […]

Categories
சவால்முரசு

நன்றி இந்து தமிழ்த்திசை – பஸ் பாஸ் புதுப்பிக்க 5-ம் தேதி சிறப்பு முகாம் – ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க 5-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் 2019-20-ம் நிதியாண்டிற்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க வருகிற 5-ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், பார்வையற்ற மாற்றுத் […]

Categories
சவால்முரசு

நன்றி இந்து தமிழ்த்த்ிசை – மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: 872 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்

     சென்னை சென்னையில் நடந்த மாநில அளவிலான் மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டி களில் தமிழகம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற னர். சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து 872 மாற்றுத்திறனாளிகள் பங்கேற் றனர். கபடி, இறகு பந்து, கைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. வீல் சேர் […]

Categories
சவால்முரசு

நன்றி இந்து தமிழ்த்திசை – தன்னம்பிக்கை இழக்காத மாற்றுத் திறனாளி

தேனி மாற்றுத்திறனாளி பாலுச்சாமி மாற்றுத்திறனாளி பாலுச்சாமி பார்வைக் குறைபாடு, பொரு ளாதாரச் சிக்கல் போன்ற அடுக்கடுக்கான சிரமங்கள் துரத்தி னாலும் தன்னம்பிக்கையுடன் மாவட்ட எல்லைகளைக் கடந்து வருவாய் ஈட்டுகிறார் மாற்றுத் திறனாளி ஒருவர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (47). பார்வையிழந்த மாற்றுத்திறனாளி. பிழைப்பிற்காக பத்தி, சாம்பிராணி விற்று வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் சாக்கடையில் தவறி விழுந்ததால் நடமாடவே சிரமம் ஏற்பட்டது. பார்த்து வந்த தொழிலும் முடங்கியதால் வறுமையில் வாடினார். […]