சமர்த்தனம்-டிரஸ்ட் சென்னை சென்னை வேளச்சேரியில் முற்றிலும் இலவசமாக மாற்றுத்திறனாளிகளுக்கு (Ortho & SHI) மற்றும் பெண்கள் (மாற்றுத்திறனாளி அல்லாத பெண்களும் விண்ணப்பிக்க முடியும் ) பயிற்சியளித்து வேலை வாய்ப்பை உருவாக்கி வரும் சமர்த்தனம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் 12வது அணியின் பயிற்சிக்கான சேர்க்கை 25/03/2019 அன்று துவங்குகிறது. பயிற்சிக் காலம் 3 மாதம். தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாற்றுத்திறனாளிகள் வந்து கலந்து கொள்ளலாம்.கலந்து கொள்வதர்கான வயது வரம்பு 18 to 35 வரை. மாற்றுத்திறனாளிகள் தங்கிப் […]
அரசு பொது நூலக துறை சங்க மாநில குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் B.பாரதிஅண்ணா.மாநில செயலாளர்.P.சரவணன்.மாநில பொருளாளர்.N.நாகராஜன். துணை தலைவர்கள். J.ஜெயக்குமார். K.சண்முகநாதன். P.சீத்தாலட்சுமி. S.K.மாரியப்பன்.இணை செயலாளர்கள்: S.ராஜதுரை. S.முருகன். தஞ்சாவூர்.ஸ்டாலின் மற்றும் சிவாஜி. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் பின் வருமாறு…1,கிராமப்புற நூலக பணியாளர்கள் அவர்களுக்கு முழு கால முறை ஊதியம் கொடுக்க வேண்டும்.2, 2500 சிறப்பு பயணப்படி மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.3, மாற்றுத்திறனாளிகளுக்கு பணியிடை மாற்றம்/மாற்றுப்பணி மாற்றுத்திறனாளி அடிப்படையில் […]
சென்னை:மெரினா கடற்கரை சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அலுவலகத்தில், கடந்த மார்ச் 13 அன்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த புரோகிதர்களை அழைத்து, பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், எனவே, அதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம், மாநில தேர்தல் ஆணையருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்தக்கடிதம் இதோ!“அன்புடையீர் வணக்கம். பொருள்: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வேளையில் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையரகத்தில் […]
மார்ச் 31-க்குள் 250 பேரை சேர்க்க இலக்கு நிர்ணயம் , ப.முரளிதரன் , சென்னை நன்றி இந்து தமிழ்த்திசை அஞ்சல்தலைகளை ஒட்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மீனவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள். அஞ்சல் துறையில் தற்காலிக அடிப்படை யில் வேலை செய்வதற்கு மீனவர்கள் குடும் பத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் மாற்றுத் திறனாளிப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை நகர மத்திய மண்டல அஞ்சல்துறை சார்பில், மீனவப் பெண்களின் […]
ஒரு முக்கிய அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளை அரசியல் நையாண்டிக்கும் உவமைக்கும் பயன்படுத்துவதை கண்டித்து! மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில்இன்று கண்டன ஆர்ப்பாட்டம்! நாள்: – மார்ச்-20, புதன் மாலை 4 மணி! இடம்: – சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை! மாற்றுத்திறனாளிகளே அணிதிரள்வீர்! ஜனநாயக சக்திகளே ஆதரவு தாரீர்! வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
கால்வாயில் விழுந்த பெண் உயிரிழப்பு
நன்றி இந்து தமிழ்த்திசை அரக்கோணம் அரக்கோணம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அம்சா (45). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அருகில் உள்ள கால்வாயில் அவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விரைந்து சென்று அம்சாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் கால் தவறி விழுந்ததில் கால்வாய் நீரில் […]
நன்றி இந்து தமிழ்த்திசை கடலூர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழக்கடம்பூரில் ஒரு விவசாயி தனது மகள்களுடன் வசிக்கிறார். இவரது 3-வது மகள் (17) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். விவசாயி தனது வீட்டருகே உள்ள பூந்தோட்டத்தை குத்தகைக்கு விட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பாலு (53), விநாயகம் (55), ராமலிங்கம் (60), வேல்முருகன் (25), மேலக்கடம்பூர் வீராசாமி (36) ஆகிய 5 பேரும் அந்த தோட்டத்தை பராமரித்து வந்தனர். இவர்கள் 5 பேரும் மனநலம் குன்றிய சிறுமிக்கு […]
நன்றி இந்து தமிழ்த்திசை பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உத்தரவிட்டார். மாற்றுத்திறன் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து ஆட்சியர் வே.சாந்தா பேசியதாவது: மக்களவை தேர்தலில் மாற்றுத்திறன் வாக்காளர்கள் எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தளத்துடன் […]
நன்றி இந்து தமிழ்த்திசை சென்னையில் எல்ஐசி பொதுத்துறை நிறுவனத்தில் மூத்த கோட்ட மேலாளராக இருப்பவர் கருப்பையா. இவரது மூத்த மகள் டாக்டர் கே.சூர்யா, 5 ஆண்டுகளுக்கு முன்பு மர்மக் காய்ச்சலால் உயிரிழந்தார். அவரது பிரிவை தாங்க முடியாத குடும்பத்தினர், சூர்யா பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த உதவிகளை ஏழை எளிய மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சூர்யாவின் 5-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி சென்னை அமைந்தகரை […]
நன்றி இந்து தமிழ்த்திசை சேலம் மக்களவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, சேலம் சிஎஸ்ஐ சிறப்பு பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆட்சியர் ரோஹிணி தொடங்கிவைத்து கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு செய்ய தடையற்ற சூழலுடன் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்து வாக்களித்து செல்ல தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கால்கள் செயலிழந்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு மையம் சென்று வாக்குப்பதிவு செய்ய வாக்குப்பதிவு மையங்களில் சாய்வு தளம் அமைக்கப்பட்டும், சக்கர […]
