Categories
association letters association statements corona differently abled education examinations guidelines for scribe system scribe special schools

“பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு வழங்குக” முதல்வருக்கு டாராடாக் கடிதம்

     CBSE சுற்றறிக்கையினைப் பின்பற்றி, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. “தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ள 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முழுமையாகவோ அல்லது மாற்றுத்திறன் குழந்தைகளுக்காவது ரத்து செய்து , அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கக் கோரி எமது சங்கத்தின் சார்பில் ஜுன் –1 தேதியிட்டு ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளது.  பதிலி […]

Categories
agitation association letters association statements corona differently abled news Govt. policies affected differently abled

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணம் மாதம் ரூ.5000/- ஜுன்-10 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை மாநிலம் முழுவதும் போராட்டம்! மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் அறிக்கை

 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 5000 வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  “கொரோனா பேரிடர் ஊரடங்கு 5 – வது முறையாக ஜுன் -30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களாக ஏற்கனவே கிடைத்து வந்த குறைந்தபட்ச வருவாய்களைக்கூட இழந்து , மாற்றுத்திறனாளிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மருந்து […]

Categories
corona differently abled commissioner differently abled department differently abled news news about association

அறுபது நாட்களுக்குப்பின் ஒன்றிணைந்த பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம், ஆணையரின் நடவடிக்கைக்கு குவிகிறது பாராட்டு

 மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் உடனடி நடவடிக்கையால், அறுபது நாட்களுக்கும் மேலாகப் பிரிந்திருந்த பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிணைந்தது. திருவள்ளூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதிகள் மாரிமுத்து பிரியா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மாரிமுத்து இரயிலில் வணிகம் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக அரசால் முதல்கட்ட ஊரடங்கு கடந்த மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. உறவினரின் குடும்ப நிகழ்வில் பங்கேற்க தனது இரண்டு வயது மகனுடன் செங்கற்பட்டு வந்த பிரியாவால் திருவள்ளூர் திரும்ப […]

Categories
corona differently abled news differently abled teacher

“இந்த ஆண்டு மட்டுமாவது மே மாத ஊதியம் தரவேண்டும்” அரசுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

படக்காப்புரிமை தி இந்து ஆங்கிலம்  கடந்த 2012 ஆம் ஆண்டு, மாதம் 5000 என்ற தொகுப்பூதியத்தின் அடிப்படையில், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் சுமார் 16549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாகப் பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் 200 மாற்றுத்திறனாளி பகுதிநேர ஆசிரியர்களும் அடங்குவர்.ரூ. 5000 தொகுப்பூதியம் ரூ. 7700 ஆக உயர்த்தப்பட்டபோதிலும், ஒரு வருடத்தின் 11 மாதங்கள் மட்டுமே இவ்வகைப் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. மே மாதம் ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. தற்போதைய கரோனா […]

Categories
corona differently abled news from the magazine relief pension

‘1000 மாதாந்திர உதவித்தொகையை 3000 ஆக உயர்த்துக’ அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

படக்காப்புரிமை டைம்ஸ்நவ் நன்றி டைம்ஸ் நவ்: சென்னை பல்லாவரத்தின் புனித செபாஸ்டின் குடியிருப்பில் வசிக்கும் பதினெட்டு பார்வையற்ற குடும்பங்கள் ஒன்றிணைந்து ஓர் இசைக்குழுவை நடத்திவருகின்றனர். தற்போதைய கரோனா ஊரடங்கு காரணமாக, சமூக, கலாச்சார மற்றும் பல்வேறு மத நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அனைவருமே வருமானம் ஏதுமின்றி, வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கின்றனர். குழுவில் ஒருவரான தண்டபாணி, தற்போது அமல்ப்படுத்தப்பட்டிருக்கும் “ஊரடங்கின் காரணமாக நாங்கள் வருமானம் இழந்து தவித்து வருகிறோம். சாதாரண நாட்களில் ஒரு மாதத்தில் 15 கச்சேரிகள் கிடைத்துவிடும். […]

Categories
from the magazine

இதழ்களிலிருந்து: இருளில் ஒளியாவோம், இருவரும் விழியாவோம்!

நன்றி ஆனந்தவிகடன்   இருவர் மட்டுமே வசிக்கும் அந்த வீடு அன்பாலும் காதலாலும் நிறைந்திருக்கிறது. பார்வைத்திறன் இல்லாத மகேந்திரனும் ஷோபனாவும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் எல்லா வலிகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டாலும், இன்று மதிக்கத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ளனர். மகேந்திரன் உதவிப் பேராசிரியராகவும், ஷோபனா அரசுப் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றுகிறார்கள். இவர்களை இணைத்ததுடன், இவர்களின் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது காதல்! “பிறந்தபோதே பார்வைத்திறன் குறைபாடு இருந்துச்சு. அஞ்சாவது படிக்கிறப்போ சுத்தமா பார்வை தெரியலை. ‘இனிமேல் குணப்படுத்த முடியாது’ன்னு ஆஸ்பத்திரியில சொல்லிட்டாங்க. ஆறாவதுல இருந்து பூந்தமல்லி […]

Categories
seminar

நிகழ்வு: பெருமிதங்களோடு தொடர்கிறது பேரவையின் பயணம்

12 மே 2020 அன்று, மாலை 3.30 மணிக்கு பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் இரண்டாவது இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் பெண்கள் என்ற தலைப்பின்கீழ் நெறியாளர் சகிதம் நான்கு பெண்கள் எழுபது பங்கேற்பாளர்களோடு மேற்கொண்ட இணக்கமான உரையாடலில், இதுவரை சிந்திக்காத புதிய கோணங்களும், பல எளிய புரிதல்களும் இதயத்தைக் கிளறின. வெண்ணிலா டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை மேற்கொண்டுவரும் வெண்ணிலா அவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தளங்களில் பார்வையற்ற […]

Categories
examinations

ஜூன் முதல் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, குழப்பத்தில் தவிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்கள்

நேற்று, மே 12 ஆம் தேதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எதிர்வரும் ஜூன் முதல் தேதி தொடங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. அமைச்சரின் இந்த அறிவிப்பு, உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பல்வேறு கேள்விகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய சிறப்புப் பள்ளி மாணவர்கள் என்ன […]

Categories
corona differently abled news

இணையம்: துணையாக இருந்தவர் இறந்தது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்த மூதாட்டி!

நன்றி மின்னம்பலம்சென்னை மயிலாப்பூர் பகுதியில் மூன்று சக்கர வண்டி ஒன்றை வீடாக மாற்றி சாலையோரம் வசித்து வந்தவர்கள் தங்கப்பன் மற்றும் ஜெயா. 65 வயதாகும் ஜெயா, 70 வயது தங்கப்பனிடம் காலையில் பேசியபடியே தனது நாளை துவங்குவது வழக்கம். அதுபோல ஞாயிற்றுகிழமை அவர் பேசிக்கொண்டிருக்கையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தங்கப்பன் ஏற்கனவே இறந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.அந்த பகுதியில் வசிப்பவர்கள் அவர்களுக்கு காலை உணவு வழங்க வந்தபோது, தங்கப்பன் இறந்தது அவர்களுக்கு தெரியவர பார்வையற்ற […]

Categories
important programs seminar

நிகழ்வு: பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் இரண்டாவது இணையவழிக் கருத்தரங்கம் மே_2020! கருத்தரங்கில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்? சமூக,, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் பார்வையற்ற பெண்கள்

12 மே 2020, செவ்வாய் பிற்பகல் 3.30 மணிக்கு! கருத்தரங்கில் பங்கேற்பதற்கான ஜூம் இணைப்பு  Meeting ID: 840 1586 3576 கருத்தரங்கில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்?நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்,உங்கள் திறன் பேசி அல்லது கணினியில் Zoom செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.  கூகுல் ப்லே ஸ்டோரில் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் விண்டோசுக்கான செயலியைத் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் செயலியைத் திறந்தால், join meeting என்ற இடத்தில் சொடுக்கினால், உங்கள் பெயர் மீட்டிங் பாஸ்வேர்ட் கேட்கும். பெயர் என்ற […]