19 ஜூலை, 2020 தொலைக்காட்சி ஊடகங்களில் ஊனமுற்றோர் குறித்த பதிவுகள்.Zoom இணைப்பு:https://us02web.zoom.us/j/83738267875Meeting ID: 837 3826 7875 வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் நான்காவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் “தொலைக்காட்சி ஊடகங்களில் ஊனமுற்றோர் குறித்த பதிவுகள்” என்ற பொருண்மையில் எதிர்வரும் 19 […]
Category: seminar
9 ஜூலை, 2020 ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92, 93 ஆகிய பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளவிருந்த சட்ட திருத்த நடவடிக்கையினைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது நடுவண் அரசு. கரோனாவுக்குப் பின்னான காலகட்டத்தில், நாட்டின் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும்பொருட்டு, நடுவண் அரசால் இயற்றப்பட்ட 19 சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்தது நடுவண் அரசு. அதன்படி, ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் உயிர்ப்பாகமான ‘குற்றமும் தண்டனைகளும்’ என்கிற 16ஆம் அத்தியாயத்தின் பிரிவுகளான 89, 92, […]
7 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92 மற்றும் 93 ஆகியவற்றில் நடுவண் அரசு சில திருத்தங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்த திருத்தங்கள் எவை, அரசின் முடிவை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விவாதங்களை முன்னெடுக்கிற முதல் களமாய் அமைந்தது பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் ஜூம் வழிக் கருத்தரங்கு. அந்த நிகழ்வின் சில துளிகள் இங்கே. “எல்லாச் சட்டங்களும், அவற்றை மேம்படுத்தும் பொருட்டு திருத்தப்படும். நமது ஊனமுற்றோருக்கான […]
AICFB Zoom Meeting பார்வையற்றவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க முடியுமா?மறைக்கப்படும் தகவல்களை வெளிக்கொணர இயலுமா? இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள, இன்று 20.06.2020 நண்பகல் 12.00 மணி அளவில்,“தகவல் அறியும் உரிமைச் சட்டம்பயன்பாடும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும்” என்ற தலைப்பில்அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறுஅகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு(All India Confederation of the Blind)இணைய வெளி கருத்தரங்கம்குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.நாள் : […]
பார்வையற்றோர் ATM, Net Banking, cheque book, Loan வசதிகளைப் பெற இயலுமா? வங்கி கடன்களில் பார்வையற்றோருக்கு ஏதேனும் சலுகைகள் உள்ளதா?இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள ,19.06.2020 இன்று நண்பகல் 12.15 மணி அளவில், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பால், பார்வையற்றோருக்கான வங்கி சேவைகள் என்ற தலைப்பில்நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறு ஏஐசிஎஃப் பியின் அலுவலகம் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு(All India Confederation of the Blind)இணைய வெளி கருத்தரங்கம்குறிப்பு : […]
பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் மூன்றாவது இணையவழிக் கருத்தரங்கம் இன்று, 14 June-2020, நியாயிரு காலை 10.30 மணிக்கு! பார்வையற்றோருக்குப் பெருகிவரும் பணிவாய்ப்புச் சிக்கல்கள்!Zoom இணைப்பு இதோ! https://us02web.zoom.us/j/89513060230 Meeting ID: 895 1306 0230வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் மூன்றாவது […]
12 மே 2020 அன்று, மாலை 3.30 மணிக்கு பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் இரண்டாவது இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் பெண்கள் என்ற தலைப்பின்கீழ் நெறியாளர் சகிதம் நான்கு பெண்கள் எழுபது பங்கேற்பாளர்களோடு மேற்கொண்ட இணக்கமான உரையாடலில், இதுவரை சிந்திக்காத புதிய கோணங்களும், பல எளிய புரிதல்களும் இதயத்தைக் கிளறின. வெண்ணிலா டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை மேற்கொண்டுவரும் வெண்ணிலா அவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தளங்களில் பார்வையற்ற […]
12 மே 2020, செவ்வாய் பிற்பகல் 3.30 மணிக்கு! கருத்தரங்கில் பங்கேற்பதற்கான ஜூம் இணைப்பு Meeting ID: 840 1586 3576 கருத்தரங்கில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்?நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்,உங்கள் திறன் பேசி அல்லது கணினியில் Zoom செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். கூகுல் ப்லே ஸ்டோரில் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் விண்டோசுக்கான செயலியைத் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் செயலியைத் திறந்தால், join meeting என்ற இடத்தில் சொடுக்கினால், உங்கள் பெயர் மீட்டிங் பாஸ்வேர்ட் கேட்கும். பெயர் என்ற […]
‘பேரிடர் காலங்களில் ஊனமுற்றோர் உரிமைகளும், உண்மை நிலையும்!’ என்ற தலைப்பின்கீழ், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் பேரவையால் இணையவழிக் கருத்தரங்கு இன்று (19, ஏப்ரல்) ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 11 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்வில், ஐம்பது நபர்கள் ஜூம் வழியாக இணைந்து, இறுதிவரை உற்சாகம் குன்றாது கலந்துரையாடல் நிகழ்த்தினர். இந்தக் கருத்தரங்கில், தமிழகத்தில் இருந்து இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வு மேர்க்கொண்டுவரும் பார்வை மாற்றுத்திறனாளி ஸ்ருதி வெங்கடாசலம் பங்கேற்று, பன்னாட்டுச் […]
