ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க 5-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் 2019-20-ம் நிதியாண்டிற்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க வருகிற 5-ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், பார்வையற்ற மாற்றுத் […]
Category: சவால்முரசு
சென்னை சென்னையில் நடந்த மாநில அளவிலான் மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டி களில் தமிழகம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற னர். சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து 872 மாற்றுத்திறனாளிகள் பங்கேற் றனர். கபடி, இறகு பந்து, கைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. வீல் சேர் […]
தேனி மாற்றுத்திறனாளி பாலுச்சாமி மாற்றுத்திறனாளி பாலுச்சாமி பார்வைக் குறைபாடு, பொரு ளாதாரச் சிக்கல் போன்ற அடுக்கடுக்கான சிரமங்கள் துரத்தி னாலும் தன்னம்பிக்கையுடன் மாவட்ட எல்லைகளைக் கடந்து வருவாய் ஈட்டுகிறார் மாற்றுத் திறனாளி ஒருவர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (47). பார்வையிழந்த மாற்றுத்திறனாளி. பிழைப்பிற்காக பத்தி, சாம்பிராணி விற்று வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் சாக்கடையில் தவறி விழுந்ததால் நடமாடவே சிரமம் ஏற்பட்டது. பார்த்து வந்த தொழிலும் முடங்கியதால் வறுமையில் வாடினார். […]
சரவணமணிகண்டன் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பிரெயிலில் பூத் ஸ்லிப்புகள் வழங்கப்பட வேண்டும் என அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களின் அதிகாரிகளுக்கு நடுவண் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் பிரெயில் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. இந்நிலையில், நடுவண் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பானது, பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதோடு, பொது மக்களிடம்ம் இது பிரெயில் குறித்தான, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கல்வி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும், […]
OF the 10 government schools for the visually impaired, music teacher posts are lying vacant in six of them. In Tiruchy, the post has been vacant since 2015. The school in Pudukkottai does not even have such a post. A social media post on the lack of music teachers has raised questions on whether the […]
திறமைக்குக் கைகொடுங்கள்:
பார்வைத்திறன் குறையுடையோருக்கான திருச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பாடும் பறவை அபினயா. எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு சங்கீதப் பயிற்சி எல்லாம் கிடையாது. கேட்டதைப் பாடுகிறாள், ஆனால், பிறர் கேட்டுச் சிலிர்க்கும்படி பாடுகிறாள். கண்ணைமூடிக்கொண்டு அவள் எதிரே அமர்ந்துவிட்டால், பிரத்யேகமான தியான வகுப்புகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது. சங்கீதத்தின் இந்த அக்கினிக் குஞ்சை நான் அடையாளம் காட்டிவிட்டேன். இனி பொறுப்பு உங்கள் கையில். உடனே சாப்பாடு, பண உதவி என்றெல்லாம் ஆரம்பிப்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களுடன் ஒரு வேண்டுகோள் […]
தடாலடி பெரியதுரை, தடதடக்குது நெல்லை:
ஊனமுற்றோருக்கான சட்டம் 2016 (RPD act 2016) பிரிவு 92.ஏயின்கீழ் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர்மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி தமிழகத்தில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்தது என்ன ? கடந்த இரண்டு நாட்களாக மேற்கண்ட செய்தி வாட்ஸ் ஆப்பில் மாற்றுத்திறனாளிகளால் பெருமிதத்தோடு பகிரப்பட்டுக்கொண்டிருக்க, உண்மையில் நடந்ததை அறிந்துகொள்ள ‘வெற்றித்தடாகம் செய்திகள்’ சார்பாக, பேராசிரியர் பெரியதுரை அவர்களைத் தொடர்புகொண்டோம். அவர் நம்மிடம் நடந்தது குறித்து விவரித்தார். “நான் […]
பிரெயில் தின வாழ்த்துகள்
உலக பிரெயில் நாள் ஐக்கிய நாடுகள் பொது அவை – 2019 ஜனவரி 04 லூயி பிறந்த தினம் உலக பிரெயில் நாளாகக் கடைபிடிக்கப்படும்’ என கடந்த டிசம்பர் 17, 2018 அன்று நடந்த கூட்டத்தில் அறிவித்தது. இதை வரவேற்றுள்ள உலகப் பார்வையற்றோர் ஒன்றியம் (World Blind Union) இதன்மூலம் தங்களது நீண்டநாள் கோரிக்கை ஐக்கிய நாடுகள் அவையால் ஏற்கப்பட்டுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த அறிவிப்பால் பிரெயில் முறையை வளர்த்தெடுப்பதில் உலகநாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படும் என தெரிவித்துள்ளது. […]
கடந்த ஜூலை மாதத்தின் ஒருநாள், காலை 7.30 மணிக்கு புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்குக் கிளம்பினேன். வழக்கம்போல 75 விழுக்காடு பயணச்சலுகைக்காக என் அடையாள அட்டை நகலை பயணச்சீட்டு தருபவரிடம் நீட்டினேன். நான் ஏறிய பேருந்து நடத்துநர் இல்லாத பேருந்தாம். எனவே முதலில் நேரமில்லை என்ற காரணத்தைச் சொன்ன பயணச்சீட்டு தருபவர், கொஞ்ச நேரத்திலேயே “இந்த பஸ்ல இதெல்லாம் செல்லாது” என்று சொல்லிவிட்டார். அவர் சொன்ன அந்த வாக்குமூலத்தை அப்படியே எனது அடையாள அட்டை நகலில் எழுதித் […]
கலைஞர் நினைவிடத்தில் விரல்மொழியர்
பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் மின்னிதழான விரல்மொழியரின் கலைஞர் சிறப்பிதழ், கலைஞரின் நினைவிடத்தில் வைத்து அவருக்குப் புகழ்வணக்கம் செய்யப்பட்டது. ஆர்வமுள்ள ஆறு பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் இணைந்து, பார்வையற்றோரின் வாழ்வியலைப் பதிவு செய்யும் நோக்கில் துவங்கப்பட்டதுதான் மாதாந்திர மின்னிதழான விரல்மொழியர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் திரு. கலைஞர் அவர்களின் மறைவை ஒட்டி, தங்களது ஆகஸ்ட் மாத மின்னிதழை கலைஞர் சிறப்பிதழாக வெளியிட்டனர். கலைஞர் சிறப்பிதழ் இணையத்தில் மட்டுமே பலராலும் படிக்கப்பட்ட கலைஞர் சிறப்பிதழை கடந்த டிசம்பர் […]
