31 ஜூலை, 2020 ரவிக்குமார் இப்போதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏடிஎம் வசதி கிடைக்கவில்லை என்ற ஒரு பார்வையற்றவரின் கதறலுக்குத் தீர்வுகிடைத்திருக்கிறது. மீண்டும் இன்னொரு குரல்; இந்தமுறை இந்தியன் வங்கியின் வாடிக்கையாளரிடமிருந்து. பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. ரவிக்குமார் அவர்கள், உடல் மற்றும் பார்வைக்குறைபாடு எனஇரண்டு வகையான ஊனங்களால் பாதிக்கப்பட்டவர். தான் வங்கிக்குப் பணம் எடுக்க செல்வதற்கே தனக்கு இன்னொருவரின் துணை தேவைப்படும் நிலையில், வங்கியின் […]
